Tuesday, 12 March 2019

மக்களவை தேர்தலை தள்ளி வைக்க முடியாது: மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தேர்தல் கமிஷன் பதில்...!!

மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடக்கிறது. ஏப்ரல் 18-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டமும், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடப்பதால், மக்களவை தேர்தலை தள்ளி வைக்க கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனு மீதான விசாரணையின் போது, மதுரையில் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்துவோம், ஒத்திவைக்க முடியாது என  இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 இதையடுத்து, ”சித்திரை திருவிழா நடைபெறுவதால் தேர்தலை தள்ளிவைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது குறித்து நாளை மறுநாள் தெரிவிக்க வேண்டும்” என கூறி விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment