Tuesday, 12 March 2019

அங்கீகாரமற்ற செயலியை பயன்படுத்துவோருக்கு தடை.!’ - வாட்ஸ்-அப் அதிரடி...!!

தங்களது பயன்பாட்டாளர்கள் அங்கீகராமற்ற வாட்ஸ்-அப் தொடர்பான ஆப்ஸுகளை பயன்படுத்தினால் தடை செய்யப்படுவார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்-அப் மூலம் போலி செய்திகளை பரப்புவது, வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றத்தை காட்டி பிறரை மிரட்டுவது உள்ளிட்ட எதிர்மறை கருத்துக்களும் வாட்ஸ்-அப் மீது வைக்கப்பட்டன. இருப்பினும் வாட்ஸ்-அப் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அசுரத் தனத்தில்
உயர்ந்துள்ளது. அதேசமயம் வாட்ஸ்-அப் நிறுவனத்தின் செயலியைப் போன்றே பல போலி செயலிகள் ப்ளே-ஸ்டோரில் சித்தரிக்கப்பட்டுள்ளன. பல வெப்-சைட் ஹேக்கர்கள் இந்தச் செயலை செய்துள்ளனர். அவர்கள் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆப்ஸ்-களை பயன்படுத்துவோர் தங்களுக்கு தெரியாமலே சொந்த தகவல்களை பிறருக்கு அளித்துக்கொண்டிருக்கின்றனர்.

இதுதவிர சில வாட்ஸ்-அப் கட்டுப்பாடுகளை மீறுவதற்கும், பிறரை ஏமாற்றுவதற்கும் இதுபோன்ற போலி செயலிகளை பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, கடைசியாக வாட்ஸ்-அப்பை பார்த்த நேரம் எனக் குறிப்பிட்ட நேரத்தை பதிவு செய்துவிட்டு, இரவு முழுவதும் வாட்ஸ்-அப் பயன்படுத்தினாலும் அவர்கள் குறித்து வைத்த நேரமே கடைசி நேரமாக காட்டும். இதன்மூலம் தங்கள் நண்பர்களை அந்த நபர் ஏமாற்ற நேரிடும்.

இந்நிலையில், இதுபோன்ற சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் வாட்ஸ்-அப் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாட்ஸ்-அப் ப்ளஸ் (WhatsApp Plus) மற்றும் ஜிபி வாட்ஸ்-அப் (GB WhatsApp) ஆகிய செயலிகளை பயன்படுத்தும் வாட்ஸ்-அப் பயன்பட்டாளர்களின் கணக்கு முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*இந்த இரண்டு செயலிகளும் தங்களின் அதிகாரப்பூர்வ செயலிகள் இல்லை என்றும், இந்தச் செயலிகள் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களின் பாதுகாப்பிற்கு தாங்கள் பொறுப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த செயலிகளை பயன்படுத்து நபர்கள், உடனே அங்கீகரிக்கப்பட்ட வாட்ஸ்-அப் செயலிக்கு தங்கள் தகவல்களை மாற்றிக்கொண்டு அதை மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தொடர்ந்து அங்கீகரிக்கப்படாத அந்தச் செயலிகளை பயன்படுத்துவோரின் வாட்ஸ்-அப் கணக்குகள் நிரந்தமாக முடக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. தற்போது, அந்தச் செயலிகளை பயன்படுத்துவோரின் கணக்குகள் தற்காலிகமாக  முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment