Sunday, 3 March 2019

கோர்ட்டு ஆலோசனைப்படி டாஸ்மாக் மது விற்பனையை 2 மணிநேரம் குறைக்க முடிவு!

டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை பகல் 12 மணிக்கு
பதில் மதியம் 2 மணிக்கு திறக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மதுக்கடை குறைந்தாலும் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. மதுக்கடையில் காலையில் திறப்பதற்கு பதில் மதியம் திறந்தால் என்ன? என்று அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து அரசு தரப்பில் பல்வேறு கட்ட ஆலோசனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மதுக்கடைகளை பகல் 12 மணிக்கு பதில் மதியம் 2 மணிக்கு திறக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து டாஸ்டாக் அதிகாரிகளிடம் கேட்டதற்கு மதுக்கடைகளின் நேரத்தை குறைப்பது அரசின் முடிவாகும். இதை தேர்தலுக்கு பிறகு செயல்படுத்துவதா? அல்லது அதற்கு முன்பே செயல்படுத்தலாமா? என்பதை அரசு தான் முடிவு செய்து அறிவிக்கும் என்றனர்.

No comments:

Post a Comment