Saturday, 23 February 2019

பதிவிறக்க வேகம்: ஏர்டெல் முதலிடம்!


4ஜி நெட்வொர்க் பதிவிறக்க வேகத்தில் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி ஏர்டெல் முதலிடம் பிடித்துள்ளது.

மொபைல் டேட்டா மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான டூடெலா, இந்திய நெட்வொர்க் நிறுவனங்களின் 4ஜி சேவை குறித்து ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, சராசரியாக 8.6 Mbps வேகத்துடன் ஏர்டெல் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில், பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். உள்ளது. இதன் பதிவிறக்க வேகம் 6.8 Mbps ஆக இருக்கிறது. வோடஃபோன் (6.4 Mbps), ஐடியா (6.3 Mbps) மற்றும் ஜியோ (6.2 Mbps) உள்ளிட்ட நிறுவனங்கள் 4ஜி பதிவிறக்க வேகத்தில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

பதிவேற்ற வேகத்தைப் பொறுத்தவரையில், ஐடியா நெட்வொர்க் (4.7 Mbps) முன்னிலையில் உள்ளது. வோடஃபோன் 4.5 Mbps, ஏர்டெல் 4.3 Mbps, பி.எஸ்.என்.எல். 4.2 Mbps, ஜியோ 3.8 Mbps உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. பதிவேற்ற வேகத்திலும் பதிவிறக்க வேகத்திலும், ரிலையன்ஸ் ஜியோ கடைசி இடத்தில் இருந்தாலும், நாடு முழுவதும் ஒட்டுமொத்த நெட்வொர்க் சேவையில் ஜியோ முன்னிலை வகிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. ஜியோவின் சேவைத் தரம் 95.7 சதவிகிதமாக இருந்துள்ளது. அடுத்த இடத்தில் ஏர்டெல் (93.6%) இருக்கிறது.

No comments:

Post a Comment