Sunday, 17 February 2019

நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்


நமது உடல் சிறப்பாக செயல்படுவதற்கு நமது நுரையீரல் முக்கிய பங்காற்றுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. எனினும் நமது நுரையீரல்கள் தொடர்ந்து காற்றை மட்டுமில்லாமல், புகைப்படித்தலுடன் காற்றிலுள்ள மாசூட்டிகளால் சில ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பொருட்தளையும் சேர்த்தே சுவாசிக்கும் போது பெறுகிறது. இந்த மாசூட்டிகளால் ஆஸ்துமா, நிமோனியா, புற்றுநோய் என ஏராளமான சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன

சுவாசப் பிரச்னை

எனவே நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சிறந்த வழி என்பது, தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்தல் மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்தல் ஆகும். ஆரோக்கியமான உணவு கட்டுப்படுகளின் மூலம் நீண்ட நெடிய நோய நொடியற்ற வாழ்க்கையை வாழ முடியும். இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் புகைப்பிடிக்கும் மக்கள்தொகையின் உயர்வு காரணமாக, சுவாசப் பிரச்சனைகள் எப்போது அதிகமாகவே உள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, 235 மில்லியன் மக்கள் குணப்படுத்தக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய அளவிலான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உங்களின் நுரையீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க விரும்பினால், அவற்றை சிறப்பதாக செயல்பட வைக்கும் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

ப்ரோக்கோலி

இதில் வைட்டமின் சி, கரோடேனாய்டு, போலேட்மற்றும் பைடோ கெமிக்கல் அதிகமாக இருப்தால். நுரையீரலில் ஏற்படும் சேதாரத்தை தடுக்கிறது. மேலும் இதில் எல்-சல்போராஃபேன் அடங்கியுள்ளதால், சுவாசப்பிரச்சனைகளை தடுக்கும் வகையில், அழற்சியை எதிர்க்கும் ஜீன்களை ஏற்படுத்துகின்றன. நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பிரக்கோலி ஒன்றையு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும்.

வால்நட்

வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகளில் ஒமோகா 3 ஃபேட்டி அசிட் அதிகம் உள்ளது. எனவே இதை கை நிறைய சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா மற்றும் இதர சுவாச கோளாறுகளை எதிர்த்து போராடும். மேலும் இந்த ஒமோகா 3 அசிட்டில் அழற்சியை எதிர்க்கும் புரதங்கள் உள்ளன.

சாலட்

உங்களுக்கு ஒன்று தெரியுமா? காரட் சாப்பிடுவது போல் பிரக்கோலியை வெறுமனே அப்படியே சமைக்காமல் சாப்பிடலாம். அப்படி சாப்பிடுபவர்கள் அல்லது லேசாக வெண்ணெய் சேர்த்து வதக்கி சாலட்டாகவும் சாப்பிட்டு வரலாம்

No comments:

Post a Comment