Wednesday, 13 February 2019

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் விவகாரம் குறித்து அமைச்சர் பதில்...!!

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் விவகாரம் குறித்து அமைச்சரவை கூடி முடிவு செய்யும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் விவகாரம் குறித்து அமைச்சரவை கூடி முடிவு செய்யும் என்று சட்டப்பேரவையில்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மாநில அரசே முடிவு எடுத்து கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில், தமிழக அரசின் முடிவு என்ன என்று சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தங்கம் தென்னரசு ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8 ம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்துவது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment