Tuesday, 26 February 2019

அங்கன்வாடி மையத்திற்கு பணியிறக்கம் செய்யும் வழக்கில் வழக்கில் இன்றைய ( 26.02.2019) வழக்கு நிலவரம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முழுவிபரம்!!!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*2009&TET போராட்டக்குழு நண்பர்களுக்கு மாலை வணக்கம்*

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼


*நாம் இரண்டு வாரத்திற்கு முன்பே அங்கன்வாடி வழக்கு தர்மபுரி மாவட்டத்திலிருந்து தனிநபர் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை குறிப்பிட்டு இருந்தோம். இன்று 26.02.2019 அதனை தொடர்ந்து சில இயக்கங்கள் பேரில் தொடுக்கப்பட்ட வழக்கும் விசாரணைக்கு வந்தது அந்த வழக்கில் பத்து நாட்களுக்கு முன்பாக தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கின் ஆணையை இதிலும் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. நண்பர்களே மதுரை உயர்நீதிமன்றத்தில் இதே வழக்கில் இன்னும் தடையாணை உள்ள காரணத்தினால் தற்போதைக்கு எந்தவித அச்சம் கொள்ளத் தேவையில்லை, அரசுத் தரப்பில் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் ஏதேனும் அழுத்தம் தரப்பட்டால் மாநில தலைமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக உங்களுக்கு உரிய வழி காட்டும். மேலும் இன்று தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கில் நகல் வந்த பின்பு அது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம். மேலும் அதில் சில சட்ட நுணுக்கங்கள் உள்ளது, அதை குறித்து வரும் சனிக்கிழமை 02.03.2019 பொதுக்குழுவில் நேரடியாக விரிவாக விவாதித்து கொள்ளலாம் அங்கன்வாடி பணி இறக்கம் செய்யப்பட்ட ஆசிரியை இது குறித்து எந்தவித அச்சம் கொள்ள வேண்டாம்.*



*மாநில தலைமை நமக்காக தொடர்ந்து நிலையை கவனித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எந்த ஒரு சூழ்நிலையிலும் நமது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் மேலும் அங்கன்வாடி மையங்களுக்கு நாம் ஏற்றுக் கொண்டு சென்றுவிட்டால் இப்போது இல்லாவிட்டாலும் சில ஆண்டுகளில் நமது ஊதியக் குறைப்பு நடந்து விடும் அதற்கு எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் உடன்பட வேண்டாம்...*
😟😟😟😟😟😟😟😟😟😟😟

*உரிமையை மீட்டெடுக்க அனைத்து வழிகளும் நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம்*...

👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼


*மாநில தலைமை*
*2009&TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட குழு*

🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼

No comments:

Post a Comment