Wednesday, 16 January 2019

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் புதிதாக மாவட்டம் உருவாக்கும் பணி; ஒரு சிறப்பு பார்வை


தமிழகத்தில், 1966ம் ஆண்டு, 13 மாவட்டங்களாக இருந்த எண்ணிக்கை, தற்போது, 33 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது. மாநிலத்தில், 10 ஆண்டுகளுக்கு பின், தற்போது புதிதாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.



இந்தியா விடுதலை பெற்ற பின், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்,இந்தியாவின் சென்னை மாகாணம் என்பது, சென்னை மாநிலம் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக, தொடர்ந்து, 1953 முதல், 1956ம் ஆண்டு வரை, தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலம் என்பது, 1969ம் ஆண்டில், அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு எனமாற்றப்பட்டது.


முந்தைய சென்னை மாகாணமானது, 13 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அவை, செங்கல்பட்டு, கோவை, கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வடஆற்காடு,தென் ஆற்காடு, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர்,திருச்சி, திருநெல்வேலி என அமைக்கப்பட்டிருந்தது.
இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு, தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.


1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து, தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1974: திருச்சி மாவட்டத்தைப் பிரித்து, புதுக்கோட்டை மாவட்டம்.

1979: கோவை மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம்.

1985: மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து, சிவகங்கை, விருதுநகர்.

1985: மதுரை மாவட்டத்தைப் பிரித்து, திண்டுக்கல் மாவட்டம்.

1986: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து துாத்துக்குடி மாவட்டம்.

1989: வடஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து, வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்கள்.

1991: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள்.

1993: தென் ஆற்காடு மாவட்டத்தை பிரித்து, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள்.

1995: திருச்சியை பிரித்து கரூர், பெரம்பலுார் மாவட்டங்கள்.

1996: மதுரை மாவட்டத்தைப் பிரித்து, தேனி மாவட்டம்.

1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து, நாமக்கல் மாவட்டம்.

1997: செங்கல்பட்டு மாவட்டத்தை பிரித்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்.

2004: தர்மபுரி மாவட்டத்தை பிரித்து, கிருஷ்ணகிரி மாவட்டம்.

2007: பெரம்பலுார் மாவட்டத்தைப் பிரித்து, அரியலூர் மாவட்டம்.

2009: கோவை, ஈரோடு மாவட்டங்களை பிரித்து, திருப்பூர் மாவட்டம்.

2019: விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம்.


தமிழகத்தில், 1966ம் ஆண்டு, 13 மாவட்டங்களாக இருந்த எண்ணிக்கை, தற்போது, 33 மாவட்டங்களாக உயர்ந்துள்ளது. 1966ம் ஆண்டு துவங்கி, 17 முறை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், தற்போது மட்டுமே நீண்ட காலத்திற்கு பின், அதாவது, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment