Friday, 14 December 2018

பாப்பாக்கு முடியல சார். அம்மாவ ஆஸ்பத்திரி கூட்டி போகணும் சார்...!!

*நண்பர்களே...*

இது நமக்கான போராட்டம். பாதிக்கப்பட்ட நாமே காரணம் தேடினால் எவ்வாறு போராட்டம் வெற்றி பெறும்...
 " *சமவேலைக்கு சமஊதியம்* " என்னும் ஒற்றைக் கோரிக்கையை வென்றெடுக்க தயவு செய்து காரணங்களைத் தேட வேண்டாம் நட்புக்களே....

👎🏿 *பாப்பாக்கு முடியல சார். அம்மாவ ஆஸ்பத்திரி கூட்டி போகணும். சார் இந்த முறை  என்னால முடியாது மன்னிச்சிருங்க... அடுத்த போராட்டத்துக்கு நீங்க கூப்பிடவே தேவையில்ல நான்தான் முதல்ஆள்.*

👎🏿 *சார் நீங்க சொல்றது புரியுது நான் (ஒருத்தி)ஒருத்தந்தான் எல்லாத்தையும் பாக்கணும்... அடுத்தமுறை கண்டிப்பா நானிருப்பேன்...*👎🏿 *இல்ல சார் அரையாண்டு லீவுக்கு வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றாங்க,  நாயில்லைனா தப்பா எடுப்பாக சார்.*


👎🏿 *சார் போன கிருஸ்த்துமஸ்க்கு தான் ஒரு வேலையா வெளியூரு போயிட்டேன்..*
*இந்த முறையாவது கொண்டாடணும்னு நெனக்கிறேன்..*
*அதான் சார்.*

👎🏿 *என்ன சார் செய்றது... மாசக்கடைசி. பைனான்ஸ் டைட்டு. ஏற்கனவே ரெண்டாயிரம் ரூவா கடனவாங்கியாச்சு... போயிட்டு வாங்க சார்.*

👎🏿 *டீச்சர்... இந்த லீவுல ரெக்கார்டு எல்லாத்தையும் முடுச்சுர்லாம்னு நெனச்சேன்.*

👎🏿 *நீங்க வேற டீச்சர் எங்கவீட்டுக்கார் இந்தாருக்கிற பக்கத்தூருக்கே தனியா விடமாட்டாரு ..! அவருக்கு இதெல்லாம் புரியவைக்க முடியாது... ஏதோ காலைல போயிட்டு சாயுங்காலம் வர்றதுனா.. சொல்லுங்க டீச்சர். ட்ரை பண்றேன்.*


👎🏿 *இல்ல பாஸ்.. க்ரூப்பெக்சாம் எழுதி வேற வேலைக்கி போகலாம்னு ட்ரைபண்ணிக்கிட்டுருக்கேன் அதான்..*

👎🏿 *ஆமா.. இவனுகளுக்கு வேற வேலயில்ல.. என்னமோ சங்கந்தான் சோருபோடுறது மாதிரி.*

👎🏿 *அடுத்து சென்ட்ரல் எலெக்சன் வேற வருது. இப்பருக்கிற கவர்மென்டே சரியில்ல. அவங்க சுருட்டத்தாம் பாப்பாணுக.. ஒனக்கு பொசுக்குனு தூக்கி குடுக்கபோறானாக்கும்..! இதெல்லாம் வேலைக்காகாத வேண்டாத வேலை..*

👎🏿 *நமக்கிந்த போராட்டம் எல்லாந்தேவையில்லை. நமக்கென்ன காசுபிரச்சனையா? இல்லவேயில்ல. சொந்தமா ரெண்டு வீடுருக்கு. கார் இருக்கு... வீட்டுக்காரர் நல்லாத்தான் சம்பாரிக்கிறாரு. பசங்க CBSE ஸ்கூல்லதான் படிக்கிறானுக... நமக்கெதுக்கு இந்த போராட்டங்கீராட்டமெல்லாம்.*

👎🏿 *அண்ணெ.. போராடுறோமே ஏதாவது கிடைக்குமா..? இல்ல ராபர்ட் சார் பொட்டி வாங்கிருப்பாருனு எங்கHM சொன்னாரு அதான கேட்டேன்.*

👆👆👆இது போன்ற சால்சாப்புகளுக்கும்,  சந்தேகங்களுக்கும் விடை நம்மிடம் மட்டுமே  இருக்கிறது.

 *எல்லாருக்கும் குடும்பம் இருக்கிறது.. அதில் சிக்கல்கள் இருக்கிறது. எனினும் நாம் மார்தட்டிச்சொல்ல வேண்டாமா..? இந்த வெற்றியில் எனக்கும் பங்கிருக்கிறதென்று.??*

*உங்களுக்கு பணப்பிரச்சனையில்லாமல் இருக்கலாம்... என்னை உன் தோழனாக நினைத்து போராட்டத்தில் கலந்துகொண்டு எனக்காக வாங்கித்தரமாட்டாயா.என்னுடைய சங்கடத்தில் பங்கெடுக்க மாட்டாயா.... இது நமக்கான பிரச்சனை இல்லையா...?போராட்டகளத்தில் பங்கெடுத்தால் உன்னால் சிலரின் கண்ணீர் துடைக்கப்படும் என்பதை அறிந்துகொள் நண்பா...*

*இது நம்முடைய போராட்டம்...*
*நமக்கான போராட்டம்...* *என்னுடைய போராட்டம்...*
*எனக்கான போராட்டம்..*
*என்பதை நாம் அனைவரும் உணர வேண்டிய தருணம்..*

*முன்பு மூத்த சங்கவாதிகள் நம்மைப்பார்த்து அதெல்லாம் நடக்காது தம்பி..! என்று பரிகாசம் செய்து சிரித்தார்கள். இன்று நடந்துவிடுமோ என்று காழ்ப்புணர்வோடும்,  பொறாமையுணர்வோடும் உள்ளுக்குள் புளுங்குகிறார்கள்...*
இதுவே நிதர்சனம்..

*நான் ஒருத்தன்தானே... நான் வராமல் போனால் போராட்டம் நின்றா போய்விடும்...? என அலட்சியமாக இருந்துவிட வேண்டாம்.*

*எறும்பூற கல்லுந்தேயும். அடிமேல் அடியடித்தால் தான் அம்மியும் நகரும்.*

*இம்மியளவு காற்று பிணவுடலை உயிர் பெறச்செய்கிறது. ஒரு சொட்டு நீரில் நிறைகுடம் ததும்புகிறது. ஒரு மயிர்பீழியின் பாரம் தாங்காமல் வண்டி குடைசாய்கிறது.*

*நண்பா ஒரு தீக்குச்சி மட்டும் போதும்... அது உன்னால் மட்டுமே முடியும். ஏனெனில் நீ மட்டுமே என் மீது அக்கறை கொண்டவன். நம் பிரச்சனையில் அக்கறை கொண்டவன்..*

நண்பர்களே!!

*வஞ்சம் தீர்த்தவர்களை வசைபாடும் நேரம் இதுவன்று.*

*நெஞ்சுரம் கொண்டு வெஞ்சமர் புரிந்து விட்டதை மீட்டெடுப்போம்.*

*குருதி கரைந்து போனாலும், பரிதி மறைந்து சாய்ந்தாலும், இறுதிவெற்றி நமதென உறுதிபூண்டு போரிடுவோம்.*

" *சம வேலைக்கு சம ஊதியம் " எனும் ஒற்றை கோரிக்கையை வென்றெடுக்காமல் ஓயமாட்டோம்..*

*பேரிடியோசை கேட்டாலும், காரிருள் விரைந்து தடுத்தாலும், பாரினில் உனைமீட்டெடுக்க யார் இனி வந்து போரிடுவார்.*

*உன்னைத்தவிர...!*

*புயலென புறப்படு நண்பா...*
 *பொங்கி வரும்  வங்கக்கடல் அலையும் உன்னை வியந்து பார்க்கும் வண்ணம் குடும்பத்தோடு ஓடிவா ....*
*ஒற்றை கோரிக்கை நிறைவேறும் என்று நம்பிக்கையோடு  வா...*

👉இவண்..
*2009&TET போராட்டக்குழு*

No comments:

Post a Comment