Thursday, 27 December 2018

ஆசிரியர்கள் போராட்டம்: கட்சிகள் வேண்டுகோள்!!!

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை, முதல்வர்
அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர்கள், வலியுறுத்தி உள்ளனர்*


*அதன் விபரம்*


*🔶🔶தி.மு.க., தலைவர், ஸ்டாலின்*


*சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை முன் வைத்து, இடைநிலை ஆசிரியர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர்*


*2009 ஜூன் மாதத்திற்கு முன் நியமிக்கப்பட்டோருக்கும், அதன்பின் சேர்ந்தோருக்கும், 3,770 ரூபாய், சம்பள வித்தியாசம் உள்ளது. போராடும் ஆசிரியர்களை அழைத்து பேசி, அவர்களின் ஊதிய முரண்பாட்டை, முதல்வர், நீக்க வேண்டும்*


*🔶🔶பா.ம.க., இளைஞர் அணி தலைவர், அன்புமணி*


 *தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், இடைநிலை ஆசிரியர்கள், பாகுபாடின்றி கல்வி வழங்கும் நிலையில், அவர்களுக்கான ஊதியமும், பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும்*


 *ஆனால், இந்த விஷயத்தில், தமிழக அரசு, ஒரு தரப்பு ஆசிரியர்களுக்கு, மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது.போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை, முதல்வர் அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்*


*🔶🔶அ.ம.மு.க., துணைப் பொதுச்செயலர், தினகரன்*


 *ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டியது, அரசின் கடமை. திரும்ப திரும்ப செய்வதாகக் கூறி ஏமாற்றாமல், கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்*


No comments:

Post a Comment