Saturday, 22 December 2018

அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் குறைப்பு

அரசு உயர்,மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 8 லிருந்து 5
ஆக குறைக்கப்பட்டதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன*


*உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை குறைந்தது 8 பட்டதாரி ஆசிரியர், ஒரு தலைமைஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்பட்டது. தற்போது 160 மாணவர்கள் வரை 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது*


 *தற்போது 161 முதல் 200 மாணவர்கள் வரை கூடுதலாக ஒருவர் என, 40 மாணவர்களுக்கு தலா ஒரு ஆசிரியர் நியமிக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது*


*மேலும் 2018 செப்., 30 ல் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயிக்கவும் தெரிவிக்கப்பட்டது*


*பெரும்பாலான பள்ளிகளில் 160 க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். இதனால் 5 ஆசிரியர்கள் மட்டுமே இருக்க முடியும்*


 *மற்றவர்கள் உபரி ஆசிரியர்களாக கணக்கிட்டு பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன*


*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சிவகங்கை மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் கூறியதாவது*


 *ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு நாளைக்கு 8 பாடவேளைகள் உண்டு. அதன்படி 6 முதல் 10 ம் வகுப்பு வரை வாரத்தில் 5 நாட்களுக்கு 200 பாடவேளைகள் வரும்*


 *ஒரு ஆசிரியருக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு 28 பாடவேளைகள் அனுமதிக்கப்படுகிறது. ஐந்து ஆசிரியர்கள் 140 பாடவேளைகள் மட்டுமே பணிபுரிய முடியும்*


 *மீதமுள்ள 60 பாடவேளைகளுக்கு ஆளில்லாத நிலை ஏற்படும். இதனால் குறைந்தபட்சம் 8 ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே சரியாக இருக்கும், என்றார்.

No comments:

Post a Comment