Friday, 7 December 2018

நீட்: விண்ணப்பிக்க இன்று கடைசி!!!

⚡இளநிலை மருத்துவப் (எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) படிப்பில்
சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (டிச.7) கடைசி நாளாகும்*


*⚡ஜே.இ.இ., நெட் போன்ற மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு தேசிய தேர்வுகள் முகமையிடம் (என்.டி.ஏ.) ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வையும் என்.டி.ஏ. நடத்துகிறது*


 *⚡2019-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிப்பை என்.டி.ஏ. அண்மையில் வெளியிட்டது*


*⚡இதற்கு விண்ணப்பிக்க முன்னர் நவம்பர் 30 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது*


 *⚡அதன் பின்னர், வயது உச்சவரம்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது*


*⚡அதன்படி, நீட் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்*


 *⚡ஆன்-லைனில் கட்டணம் செலுத்த சனிக்கிழமை (டிச.8) கடைசியாகும். மேலும், விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்*


No comments:

Post a Comment