Friday, 28 December 2018

சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கை முன் வைத்து போராடி வரும் இடைநிலை ஆசிரியர் சொந்தங்களே உங்கள் போராட்டம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி. மாநிலத் தலைவர் செ.முத்துசாமி*

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*நல்ல காலத்தில் நாழிப் பால் கறக்காத மாடு உதைத்துக் கொண்டால் என்ன தரும்* இது தமிழர்களின் முதுமொழி.
இதேபோன்ற நிலைதான் இந்த அரசு கோரிக்கைகளை காலத்தில் கேட்டு  கேட்கும் பொழுது கொடுக்காமல் ஆசிரியருக்கு சிலகாலம் பொறுத்துக் கொள் என பதிலாக தருவதாக நான் அறிந்தேன். நீதிமன்றத்தில் ஏழாம் தேதி சித்திக் தலைமையிலான அறிக்கை கொடுத்த பின்பே அதைப் பற்றி ஏதும் கூற இயலும் என கல்வி அமைச்சர் கூறியதாக அறிகிறேன். நீண்ட அனுபவம் உள்ள கல்வி அமைச்சர் கமிட்டியின் அறிக்கையை காரணம் காட்டி தப்ப நினைப்பது சரியாகாது. எந்தவிதத்திலும் இது நியாயப்படுத்த இயலாத ஒன்று. எக்காலத்திலும் எந்த நீதிமன்றமோஅல்லது கமிட்டியோ அரசு முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டால் அதற்கு சட்டரீதியாக தடை ஏதும் சொன்னதில்லை. இதுதான் உண்மை. ஆதலால் போராட்டக்களத்தில் நித்தமும் துயர் கொண்டு இருக்கின்ற ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கையினை அறிந்து உடனடியாக அவர்களை  அழைத்து பேசி முடிவுகளை இன்றே அறிவிக்கலாம் அல்லது ஏழாம் தேதிக்கு பிறகு நாங்கள் இதை அறிவிக்கிறோம் என்று உத்தரவாதம் அளித்து இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரலாம். நீண்ட சட்ட மேலவை உறுப்பினராக இருந்த அனுபவம்  மற்றும் 1970 முதல் ஆசிரியர்களுக்காக போராடி பல சலுகைகள் பெற்றுத் தந்த மூத்த சங்கத்தின் தலைவர் செ.முத்துசாமி ஆகிய நான்  தமிழக அரசை இப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அன்புடன் வேண்டுகின்றேன். மேலும் இன்றைய களத்தில் போராடும் ஆசிரியர்கள் கடந்த மே மாதம் விடுமுறையில் போராடினார்கள் அதேபோன்று தற்பொழுதும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் போராடுகிறார்கள். பள்ளி நாட்களில் போராடினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்து  விடுமுறை காலங்களில் போராடும் இக்குணத்தை அரசு கண்டுணர்ந்து உடனே அழைத்துப் பேசி தீர்வு காணவும் வேண்டுகிறேன்.
*செ.மு. மாநிலத்தலைவர்,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*

No comments:

Post a Comment