Saturday, 22 December 2018

அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டே மாணவர்!!!!

அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டே மாணவர்:
அடுத்த கல்வியாண்டிலாவது கவனம் அவசியம்*


*சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அருகே, காட்டுவளவில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது*


*அங்கு, நான்காம் வகுப்பில் கனிஷ்கா, 9, பூவரசன், 9, படிக்கின்றனர். மற்ற வகுப்புகளில், ஒருவர் கூட இல்லை. ஒரு தலைமையாசிரியர் உள்ளார்*


*கடந்தாண்டில், ஐந்து மாணவர்கள் படித்தனர். மூவர், ஆறாம் வகுப்பு படிக்க, வேறு பள்ளிக்கு சென்றுவிட்டனர்*


 *புதிதாக, ஒருவர் கூட சேர்க்கப்படவில்லை. இதனால், சத்துணவு சமைப்பதில்லை. இரு மாணவர்களுக்கு, நிலவாரப்பட்டி பள்ளியிலிருந்து, சத்துணவு எடுத்து வந்து தருகின்றனர்*


*முன்னாள் வார்டு உறுப்பினர் வெற்றிவேல், 50, கூறியதாவது*


 *பள்ளியில், 2007ல், 30க்கும் மேற்பட்டோர் படித்தனர்*


*அப்போது, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையிலிருந்து, ஜருகுமலை அடிவாரம் வரை, தார்ச்சாலை அமைக்கப்பட்டது*


*பின், ஊருக்குள் தனியார் பள்ளி வேன்கள் வந்தன. தற்போது, எட்டு தனியார் பள்ளிகளின் வாகனங்கள், வீட்டுக்கே வந்து, மாணவர்களை ஏற்றிச்செல்கின்றனர். திரும்பவும், வீட்டுக்கு வந்து விடுகின்றனர். இப்பகுதியிலிருந்து, 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்*


 *இதனால், அரசு பள்ளியில், மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது. ஆங்கில வழிக்கல்வி மீது, மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால், தனியார் பள்ளிக்கு அனுப்புகின்றனர்*


*அரசு பள்ளியில், ஆங்கில வழிக்கல்வி, ஆங்கில பேச்சு பயிற்சி அளித்தால், மாணவர் சேர்க்கை உயரும். அதற்கு, தொடக்கக்கல்வி அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் அமர, இருக்கை, டேபிள் வசதி ஏற்படுத்த வேண்டும். குடிநீர் வசதியும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்*


*பனமரத்துப்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி கூறுகையில், ''எல்.கே.ஜி., - யு.கே.ஜி., படிக்க, தனியார் பள்ளிகளில், குழந்தைகளை பெற்றோர் சேர்க்கின்றனர். தொடர்ந்து, அங்கேயே படிக்க வைக்கவே விரும்புகின்றனர்*


 *அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, தற்போதே கவனம் செலுத்த தொடங்கியுள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment