Monday, 3 December 2018

டிசம்பர் -4 காலவரையற்ற வேலைநிறுத்ததிற்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றத்தில் நடந்த விபரம்...!!

🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺
*2009&TET போராளிகளுக்கு மாலை வணக்கம்*

*டிசம்பர் -4 முதல் நடக்கவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தினை எதிர்த்து இன்று 03.12.2018 மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு நண்பகல் 1 மணியளவில் விசாரணைக்கு வந்தது, கடந்தாண்டு நிலுவையில் இருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் சேர்த்து விசாரிக்கப்பட்டது.அரசு தரப்பில் CPS வல்லுனர் குழு அறிக்கை தற்போது தான் பெறப்பட்டுள்ளது என கூறினர்...*



*அதனை கேட்ட நீதிமன்றம் வரும் திங்கள் கிழமை 10.12.2018 வரை போராட்டத்தினை ஒத்திவையுங்கள் ,அரசு அதற்குள் கண்டிப்பாக CPS  குழுவில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையினை சாரம்சத்தினை  வரைவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது,மேலும் காலவரையற்ற போராட்டத்தினை ஒரு வாரகாலத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதின் பெயரில் தற்காலிகமாக போராட்டம் ஓருவாரம் ஓத்திவைக்கப்பட்டதாக தகவல் வருகின்றன.*
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁


*நண்பர்களே அனைவரும் ஒற்றுமையாக  அடுத்து வரும் நாட்களில் களத்தில் இறங்கினால் நாம் அதுகுறித்து கலந்து பேசி நம்முடைய கோரிக்கைக்கு களம் காண்போம்....*


 *நமது இலக்கு "சம வேலைக்கு" "சம ஊதிய" அரசாணை டிசம்பர் மூன்றாவது வாரத்தில் வரவில்லையெனில்  *_டிசம்பர்-23_* முதல் *உலகமே அதிரும் வண்ணம் நமது போராட்டம் நடக்கும்.நமது  போராட்டத்திற்கு  நீதிமன்றமும் தடைவிதிக்க முடியாது.மாணவர்கள் நலன் பாதிக்காத வண்ணம் விடுமுறை நாட்களில் அகிம்சை முறையில் போராட்டம் நடக்கும் போது அதற்கு தடைவிதிக்க முடியாது. அனைத்து சட்ட நுணுக்கங்களையும் ஆராய்ந்து தான் நமது போராட்டத்தினை திட்டமிட்டுள்ளோம்.*

✊🏼✊🏼✊🏼✊🏼✊🏼✊🏼✊🏼✊🏼✊🏼✊🏼
*ஒன்றுபட்ட போராட்டம்...!!*

*வென்று காட்டுவது நிச்சயம்...!!*

*2009& TET போராட்டக்குழு*
*மாநில தலைமை*

No comments:

Post a Comment