Saturday, 29 December 2018

போராடுகின்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மாற்றுத்திறனாளிகளின் அமைப்பு டிசம்பர் 3 இயக்கம் ஆதரவு

 31.05.2009 அன்று நியமிக்கப்பட்ட இடைநிலை  ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம்
ரூபாய் 8,370 கொடுக்கப்படுகிறது. ஒருநாள் வித்தியாசத்தில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூபாய் 5,200. ஒரே பணி, ஒரே கல்வி தகுதி, ஒரே நேர வேலையாயினும், உதியத்தில் மட்டும் வேறுபாடு காட்டுகிறது இந்த அரசு என 01. 06.2009 ல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பெருந்திரள் கூறுகிறது. 10 ஆண்டுகளில் வெவ்வேறு எதிர்ப்புகள், போராட்டங்கள் என முன்னெடுத்தும் சிறு குழந்தைகளை ஏமாற்றுவது போல ஊதியத்தியத்தை சமமாய் கொடுக்கிறோம் என ஒவ்வொரு முறையும் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து போராட்டங்களை வலுக்கட்டாயமாக நிறைவு செய்ய வைத்தது இந்த அரசு.
 குழந்தைகள் என்றும், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் என்றும் பாராமல் வசதி இல்லையென்றாலும் வலுவாய் போராட்டத்தில் கலந்து ஊக்கத்தை தருகிறார்கள்.
இப்படியான ஊதிய முரண்பாடுகளை களையப்படாமல், ஏழாம் ஊதியக்குழு நியமித்திருக்கிற ஊதியம் மிக கடுமையாய் ஊதிய முரண். அதாவது 31.05.2009 ல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.45 ஆயிரம் பெருகிறார்கள், ஆனால் ஒரு நாள் வத்தியாசத்தில் பணி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ. 20 ஆயிரம் என எட்டாகனியாய் நியமித்துருக்கிறது.  அவசரமான இவ்வுலகில் நியமிக்கப்பட்டிருக்கு இந்த ஊதியம் நிச்சயம் போதியதல்ல. ஊதிய முரணை களைந்து சமமாக ஊதியத்தை தர வலுவாய் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறது டிசம்பர் 3 இயக்கம்.

வேலை வேண்டி படித்து பட்டம் பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தை ஒடுக்க தமிழக காவல் துறை நல்லிரவில் அவர்களை கைது செய்து சுடுகாட்டில் விட்டது.  இதை எதிர்த்து பார்வை மாற்றுத்திறனாளி நசரத்துள்ள சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எழுதிய கடித்தை பரீசிலித்த சென்னை உயர்நீதி மன்றம் போராடுகின்ற மாற்றுத்திறனாளிகளை கையாள 14 வழிகாட்டுதல்களை தமிழக அரசுக்கு கொடுத்திருந்தது. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் குறைந்த பட்சம் கழிவறையைக்கூட ஒழுங்கு செய்து தரப்படவில்லை என்பதை டிசம்பர் 3 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகம் உடனடியாக செய்து தரப்பட வேண்டிய அத்துனை வசதிகளையும் செய்து தர வலியுறுத்துகிறது.

பேராசிரியர் தீபக்
டிசம்பர் 3 இயக்கம்.

No comments:

Post a Comment