Monday, 17 December 2018

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

முதல் முறையாக ஒரே மாதத்தில் தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-2 தேர்வுக்கான முடிவுகள் இன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது*


*கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில், மொத்தம் 6,26,726 பேர் பங்கேற்றனர்*


*இதையடுத்து, அதற்கான உத்தேச விடைகள் நவம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டன*


 *இந்த முறை விடைகளில் ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால், அவற்றை மறுத்து இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க முடியும் என தேர்வாணையம் அறிவித்திருந்தது*


*ஏற்கனவே, இது போன்ற கோரிக்கைகள் இதுவரை எழுத்துப்பூர்வமாகவே அதாவது கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலமாகவே பெறப்பட்டு வந்தன*


*இதனால், தேர்வுக்கான முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுவதால் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது*


*இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்*


 *தேர்வு முடிந்து வருட கணக்கில் காத்திருந்து பழகிபோன தேர்வாளர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக, தேர்வுகள் நடத்தப்பட்டு முதல் முறையாக ஒரு மாதத்திலேயே முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது*


No comments:

Post a Comment