Wednesday, 12 December 2018

யார் பிரிவினைவாதி..?? யார் ஏமாற்றுகிறார்கள்..?? ஜேக்டோ ஜியோ போராட்டம் - நீதிமன்ற வழக்கு விசாரணை நிலவரம். (10.12.2018)

*யார் பிரிவினைவாதி..??யார் ஏமாற்றுகிறார்கள்..??*


👨🏻‍🎓👨🏻‍🎓👨🏻‍🎓👨🏻‍🎓👨🏻‍🎓👨🏻‍🎓👨🏻‍🎓👨🏻‍🎓👨🏻‍🎓👨🏻‍🎓👨🏻‍🎓
*ஜேக்டோ ஜியோ போராட்டம் - நீதிமன்ற வழக்கு விசாரணை நிலவரம். (10.12.2018)*

😦 *மதிய உணவிற்கு பின் சரியாக 2.15 மணிக்கு நீதிமன்ற விசாரணை சில நொடி துளிகளில்  துவங்கியது. முதலாவதாக பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து 5 நிமிடம் விவாதிக்கப்பட்டது. அதில் குழுவின் அறிக்கை பெறுவதற்கு முன்னரே முதல்வர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது என கூறிய தகவலை ஜேக்டோ ஜியோ வழக்கறிஞர் பதிவு செய்தார்.*


😗 *மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்காத நிலையையும் கூறினார்.அரசு தரப்பில் வல்லுநர் குழுவின் அறிக்கை பெறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.*


😌 *அதன் பின்னர் 21 மாத ஊதிய நிலுவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அரசு தரப்பில் நிதிநிலையைக் காரணம் காட்டி எந்தவொரு உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. ஊதியக் குழு அரசாணை 303 ஐ குறிப்பிட்டு அதில் ஊதிய உயர்வு 01.01.2016 முதல் கருத்தியலாகவும் 01.10.2017 முதல் பணப்பலனாகவும் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற கருத்து கூறப்பட்டது. ஜேக்டோ ஜியோ சார்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2016 முதலே பணப்பலன் வழங்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்தப்பட்டது.*




🙂 *நீதியரசர்கள் அரசு வழக்கறிஞரிடம் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் அன்று வழங்கலாம். மேலும் மூன்று தவணைகளில் கூட வழங்கலாம் என்று ஆலோசனை கூறினர்.*


😅 *நீதியரசர்கள் அரசாணை எண் 57ன்படி ஊதிய முரண்பாடு மட்டுமே ஒரு நபர் (சித்திக்) ஊதிய குழுவில் கருத்தில் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.அங்கு ஏன் நிலுவைத்தொகை கேட்டு மனு கொடூத்தீர்கள் ஆகவே ஊதிய நிலுவை ஒரு நபர் ஊதிய குழுவினால் வழங்க இயலாது என்று குறிப்பிட்டனர்.*


😇 *ஜாக்டோ ஜியோ வழக்கறிஞர் நாங்கள் ஒரு நபர் (சித்திக்) ஊதிய குழுவிடம் ஊதிய நிலுவை சார்பாக கோரிக்கை மனு வழங்கி,அது நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு நபர் ஊதிய குழு மூலமாக 21 மாத ஊதிய நிலுவை வழங்குவதற்கு வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.*


😒 *அரசு தரப்பில் ஒரு நபர் (சித்திக்) ஊதியக்குழுவின் காலக்கெடு 30.11.2018ல் முடிவடைந்தது என்று கூறப்பட்டது.*



🙃 *பின்னர் ஜாக்டோ ஜியோ கேட்டுக்கொண்டதால் தான்  நீதியரசர்களால் 21 மாத ஊதிய நிலுவைக்காக ஒரு நபர் (சித்திக்) ஊதியக்குழுவின் கால அளவு நீட்டிப்பு செய்தார். சுமார் 3 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது.*




👺 *நீதிமன்ற விசாரணையில் எந்த ஒரு இடத்திலும் இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஊதியம் குறித்தோ, ஊதிய முரண்பாடு பற்றியோ விவாதிக்கப்படவில்லை.*



🤬 *ஊதிய முரண்பாட்டு குழுவினைப்பற்றி பேசியது என்னவெனில் அக்குழுவில் 21 மாத நிலுவைத்தொகையினை வழங்க கொடுத்த மனுவினை ஏற்க மறுத்துவிட்டார்கள் என்பது மட்டுமே.*



🙃 *வேறு எந்தவகையான விவாதமும் உள்ளே நடைபெறவில்லை.இது வழக்கு விசாரணை நேரில் கண்ட வேதனையில் வெளியில் வந்த இடைநிலை ஆசிரியரின் பதிவு.வழக்கு விசாரணை சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது ஆதில் 30 நிமிடங்கள் 21 மாத நிலுவைத்தொகை குறித்து மட்டுமே நடைபெற்றது.*


🧓🏻 *அரசு தரப்பில் 8வார கால அவகாசம் கேட்கப்பட்டது.அதை மறுத்த நீதியரசர்கள் அடுத்த விசாரணையை முதலில் 20.12.2018 ல் வைத்தார்.பின்னர் நீதிமன்ற விடுமுறைக்குப்பின் 7.01.2018 க்கு மாற்றம் செய்தனர்.*


😡 *ஆனால் தொலைக்காட்சியில் பேசிய ஜாக்டோ ஜியோ நிர்வாகி ஒருவர் இடைநிலை ஆசிரியரின் அரசு ஊதியம் குறித்தும் முதுகலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு பற்றி அரசுக்கு காலகெடு நிர்ணயம் செய்துள்ளதாக பொய்யாக பேசுகிறார்.*



🤕 *உண்மையை சொல்லாமல் ஏமாளி இடைநிலை ஆசிரியர்களை பத்தாண்டுகளாக ஏமாற்றிய நீங்கள் தவறு செய்கிறீர்களா...?உண்டெண்றால் உண்டு இல்லையென்றால் இல்லை.. எனக் கூறும் நாங்கள் பிரிவினைவாதியா..?*


🧐 *400 பேர் பார்க்கும் போதே இப்படி ஏமாற்றும் தந்திரம் நான்கு சுவற்றிக்குள் 4 பேர் மட்டும் பேசும் போது என்ன நடந்திருக்கும் என்பதை கடவுள் தான் அறிவார்.*

🤔 *வேடிக்கை பார்க்கும் எம்மினமே விரைவில் அறிந்து கொள்வாய் யார்..? பொய்யர்கள் என்று.*



🤢 *நீதிமன்றத்தில் நடந்தவற்றை அனைத்தையும் தொலைக்காட்சியிலும்,செய்திதாள்களிலும் தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது அப்படி இருந்தும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறீர்.*



🤮 *இப்படிக்கு பத்தாண்டுகளாக உம்மை நம்பி ஏமாந்த இளிச்சாவாயன் இடைநிலை ஆசிரியர்*

No comments:

Post a Comment