Wednesday, 7 November 2018

அசல் சான்றிதழ் வைத்திருக்க கூடாது கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தல்

கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் அசல் சான்றிதழ்களை
வைத்திருக்க உரிமையில்லை' என, பல்கலை மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது*


*பல்வேறு காரணங்களால் கல்லுாரியிலிருந்து, மாணவர்கள்விலகும் போது கட்டணங்களையும்,அசல் சான்றிதழ்களையும் தர மறுப்பதாக,புகார்கள் எழும்புகின்றன. இதனை தெளிவுபடுத்தும் வகையில், பல்கலை மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது*


*சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது*


*அசல் சான்றிதழ்களின் உண்மை தன்மையை, ஆய்வு செய்தவுடன் மாணவர்களிடம் கல்லுாரி நிர்வாகங்கள் ஒப்படைக்க வேண்டும். மாணவர்கள் கையெழுத்திட்ட நகல் சான்றிதழ்களே, கல்லுாரியின் பிற அனைத்து செயல்பாடுகளுக்கும் போதுமானது*


*அட்மிஷன் முடிவதற்கு, 15 நாட்களுக்கு முன்பு கல்லுாரியிலிருந்து வெளியேறும் பட்சத்தில், 100 சதவீதமும், 15 நாட்களுக்குள் எனில் 90 சதவீதமும், 15 நாட்களுக்கு மேல் 30 நாட்களுக்குள் வெளியேறுபவர்களுக்கு, 50 சதவீத கட்டணத்தையும் கல்லுாரி நிர்வாகம் திருப்பி அளிக்க வேண்டும்*


*அட்மிஷனுக்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டு, 30 நாட்களுக்குப் பின், கல்லுாரியிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு, கட்டணம் திரும்ப அளிக்க அவசியமில்லை.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் யு.ஜி.சி., இணையதளத்தில், இது குறித்த விபரங்களை பார்க்கலாம்.

No comments:

Post a Comment