Wednesday, 28 November 2018

அரசு பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் மலேசிய ஆசிரியர் : நாடு கடந்த சேவை

*

அரசுபள்ளி மாணவர்களிடம் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களுக்கு
ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் பணியில் மலேசியாவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்*


 *காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மலேசியாவை சேர்ந்த டீம் நலா அமைப்பை சேர்ந்தவர்கள் சார்பில் ஆங்கில பேச்சு பயிற்சி முகாம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பீட்டர்ராஜா வரவேற்றார்*


*டீம் நலா ஒருங்கிணைப்பாளர் நல்லபெருமாள்ராமனாதன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து பேசுகையில், ‘‘மாணவர்கள் தாழ்வு மானப்பான்மையை தூக்கி எறியவேண்டும்*


*அரசு பள்ளிகளில் படிப்பது தான் சிறந்தது என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள திறமையை வெளிக்காட்ட வேண்டும்*


*தங்களை வெளிக்காட்டாமல் பலர் உள்ளதாலேயே முன்னேற்றம் அடையாமல் உள்ளனர். ஆங்கில வார்த்தைகளை நாமாக உருவாக்க கற்றுக்கொள்ள வேண்டும்*


*தினமும் 60 நிமிடம் ஆங்கிலம் வாசித்தல் போதும், நிச்சயம் காற்றுக்கொள்ளலாம். கவனமாக கேட்க கற்று கொள்ள வேண்டும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்து கொண்டால் வெற்றி பெறலாம்’’ என்றார்*


*இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் நல்லபெருமாள்ராமனாதன் கூறுகையில், ‘‘நான் மலேசியாவில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். எனது சொந்தஊர் காரைக்குடி அருகே உள்ள ஏ.கருங்குளம்*


 *எனவே பிறந்த பகுதிக்கு எதாவது செய்ய வேண்டும் என்பதற்காக டீம் நலா என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம்*


 *இதில் நான் மற்றும்  கிருஷ்ணன்நல்லையா, சியாமளா, லதா, ராமனாதன், டாக்டர் சூரியபாரதி, டாக்டர் ஆதித்யா ஆகியோருடன் சேர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆங்கில வகுப்புகளை எடுத்து வருகிறோம். மலேசியாவில் தற்போது 50 நாட்கள் விடுமுறை என்பதால் இதில் வகுப்புகள் எடுக்கிறோம்*


 *இந்தபள்ளியை பற்றி பேஸ்புக்கில் பார்த்து இங்கு வந்து பயிற்சி வகுப்புகள் நடத்தி உள்ளோம். ஆங்கில முக்கியத்தும் குறித்தும், உச்சரிப்பு பயிற்சி நடத்தப்படுகிறது’’ என்றார்*

*SOURCE DINAKARAN WEBSITE*

No comments:

Post a Comment