Wednesday, 7 November 2018

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம் !


தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலு குறைந்து விட்டதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (புதன்கிழமை) தெரிவிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலு குறைந்து விட்டது. இந்தக் காற்றழுத்த
தாழ்வுப் பகுதி வலு குறைந்து குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுவதால், தென் தமிழகம் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில்

ஒருசில இடங்களில் கனமழைக்கும், ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. இதனால், மீனவர்கள் குமரிக்கடல் மர்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment