Monday, 5 November 2018

டெங்கு_தடுக்கும் வழி முறைகள் !

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகளை பார்ப்போம்.

காய்ச்சல்
வெவ்வேறு விதமாக வெளிப்பட்டாலும் அனைத்து காய்ச்சலுக்கும் மூல காரணம் ஒன்றே.

அது தான் கழிவுகளின் தேக்கம். நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக கழிவுகள் உடலில் தேங்குகிறது.

இந்த கழிவுகளை வெளியேற்றவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வருகிறது.

இந்த உண்மையை அரசோ, அலோபதி மருத்துவர்களோ ஒரு போதும் மக்களுக்கு சொல்ல மாட்டார்கள்.

ஊரை சுத்தமாக வைக்க சொன்ன அரசு, ஒரு நாளாவது மக்களே உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என சொன்னதா ?

டெங்கு காய்ச்சல் வருவது வெளியில் உள்ள குப்பையாலோ, கொசுவாலோ அல்ல நமது உடலில் உள்ள குப்பையால் (கழிவால்) தான்.

இதை நாம் முன்கூட்டியே சுத்தம் செய்து விட்டால் டெங்கு மட்டுமல்ல எந்த காய்ச்சலும் வர வாய்ப்பே இல்லை.

நீங்கள் சுத்தப்படுத்த மறுத்தாலும், உலகின் மிகச்சிறந்த நண்பனான உங்கள் உடல் காய்ச்சலை வர வைத்து சுத்தப்படுத்தி விடுவான். காய்ச்சல் வருவது நல்லது.

உடல் தூய்மையாக இருந்தால் அவர்கள் கூறுவது போல் வெளியில் இருந்து கெட்ட கிருமிகள் வந்தாலும் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதை அழித்துவிடும்.

தூய்மையான உடலில் தீங்கு செய்யக்கூடிய கெட்ட கிருமிகள் வாழ வாய்ப்பே இல்லை.

சரி டெங்கு போன்ற காய்ச்சல் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?

1 - இரத்த சுத்தி
2 - நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
3 - நல் உணவு
4 - சீரான இயக்கம்
5 - எண்ணெய் குளியல்
6 - பேதி மருந்து

#இரத்த_சுத்தி !
----------------------------

இரத்தத்தை எப்படி சுத்தம் செய்வது ? அதை கெடுக்காமல் இருந்தாலே தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும்.

சரி இப்பொழுது தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையால் கெடுத்துவிட்டோம், என்ன செய்வது ?

இரத்த சுத்திக்கு அருகம்புல் அற்புதமான மருந்து.

ஒரு கைப்பிடி அருகம்புல் எடுத்து அரைத்து ஒரு டம்லர் சாறில் 1/2 தே.க மிளகு தூள் சேர்த்து தினம் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறி இரத்தம் தூய்மை பெரும்.

இதை குடித்து ஒரு மணி நேரம் கழித்தே மற்ற உணவுகளை எடுக்க வேண்டும்.

குறைந்தபட்சம் பத்து நாள் முதல் ஒரு மண்டலம் வரை குடிக்கலாம். ஒரு மண்டலம் குடித்தால் இரத்தம் எவ்வளவு அசுத்தமாக இருந்தாலும் தூய்மை பெரும். யானை பலம் கிடைக்கும்.

இதை கடைப்பிடிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் சித்தா மற்றும் இயற்கை  மருத்துவத்தில் இரத்த சுத்தி சிகிச்சை எடுக்கலாம்.

எளிமையாக, குறிப்பிட்ட நாள் பழங்களை மட்டும் எடுத்து வந்தாலும், உண்ணா விரதம் இருந்தாலும் இரத்தம் தூய்மை பெரும்.

#நோய்_எதிர்ப்பு_சக்தி_அதிகரிப்பு !
-----------------------------------------------------------------

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க, சாக்கடைக்கு சமமான டி, காபி, வெள்ளை சர்க்கரை எல்லாம் தூர எரிந்துவிட்டு.

சுக்கு மல்லி காப்பி தினம் குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாவதோடு அல்லாமல்.

உடல் உறுப்புகள் பலம் பெரும். அதிக பித்தத்தை தனிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், நோய்கள் வராமல் தடுக்கும்.

"சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை"

#நல்_உணவு !
-------------------------

இட்லி தோசை போன்ற மாவு உணவுகளை குறைத்துக்கொண்டு.

தினம் காலை நீராகாரம் (பழைய சாதம்) எடுத்து வந்தால் செரிமான மண்டல உறுப்புகள் நன்கு வேலை செய்து தேங்கிய கழிவுகளை எல்லாம் வெளியேற்றும்.

உடலுக்கு அதிக பலத்தை தரக்கூடியது. Chlorine குடிநீரால் அழிக்கப்பட்ட நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருகி ஆரோக்கியம் பெருகும்.

ஆற்று நீர் வாதம் போக்கும்.
அருவி நீர் பித்தம் போக்கும்.
சோற்று நீர் இரண்டையும் போக்கும்.

இயற்கை முறையில் விளைந்த பட்டை தீட்டப்படாத அரிசியில் நீராகாரம் சாப்பிட்டால் அந்த அமிர்தமே தோற்றுப் போகும்.

இது சொன்னால் புரியாது, அனுபவித்தால் மட்டுமே தெரியும்.

இன்னொறு இரகசியம் சொல்லட்டுமா ? பொதுவாக சித்த மருந்துகளை சுடு நீரிலோ, தேனிலோ எடுக்கச்சொல்வார்கள்.

ஆனால் இந்த சோற்று நீரில் சித்த மருந்துகளை சேர்த்து எடுத்தால் மருந்தின் வீரியம் பெருகும்.

பாதிக்கப்பட்ட உறுப்புகளை மின்னல் வேகத்தில் சென்று குணப்படுத்தும்.

இது போக, உங்கள் பகுதியில் விளையும் காய்கனிகள், பழங்கள், கீரைகள், அரிசிகள், குறுந்தானியங்கள், பருப்புகள், பயிர் வகைகள், கிழங்கு வகைகளை உணவில் சேர்க்க வேண்டும்.

#சீரான_இயக்கம் !
----------------------------------

சீர் + அகம் = சீரகம், சீர் - சரியாக, அகம் - உள். உடலின் உள் உறுப்புகள் சீராக இயங்க இது உதவி செய்யும்.

தினம் சீரகத்தண்ணீர் எடுத்து வந்தால் உடல் உறுப்புகள் சீராக இயங்கும்.

உறுப்புகள் சீராக இயங்கினால், கழிவுகள் தேங்காது, கழிவுகள் தேங்காவிட்டால், நோய் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்."

#எண்ணெய்_குளியல் !
-------------------------------------------

வாரம் ஒரு நாள் அனைவரும் எண்ணெய் குளியல் எடுத்து வாருங்கள். பிறகு உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே பாருங்கள்.

ஆண்கள் புதனும், சனியும். பெண்கள் செவ்வாயும், வெள்ளியும் குளிக்க வேண்டும்.

எண்ணெய் குளியல் விதிமுறைகளை கடைப்பிடித்து குளிக்க வேண்டும்.

#பேதி_மருந்து !
-----------------------------

சித்தர்கள் குறிப்பிட்ட 4448 நோய்களுக்கு காரணம் வாத, பித்த, கபம் சமநிலை பாதிப்பால் கழிவுகள் தேங்குவதே.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை அனைவரும் பேதி மருந்து எடுத்து குடல்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

குடல் சுத்தமே உடல் சுத்தம்.

அவ்வளவு தாங்க இந்த ஆறு வழிமுறைகளை நாம் கடைப்பிடித்தால் டெங்கு போன்ற காய்ச்சலை முன்கூட்டியே வராமல் தடுக்க முடியும்.

கடைப்பிடிக்க முடியாமல் காய்ச்சல் வந்தாலும் கூட நிலவேம்பு கசாயம் கொடுத்து சரி செய்துகொள்ளலாம்.

இதற்கு போய், ஏதற்கு பயப்படறீங்க ? மகிழ்ச்சியாய் இருங்கள்.

புறமான வீடு வாசலையும், அகமான உடலையும் தூய்மையாக வைத்துக்கொண்டால் டெங்கு போன்ற காய்ச்சல் மட்டும் அல்ல மனிதனுக்கு எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை.

புறத்தையும்
அகத்தையும்
தூய்மைப் படுத்துவோம்.
ஆரோக்கியமாக வாழ்வோம்.

#வரும்_முன்_காப்பதே_நலம்.

No comments:

Post a Comment