Thursday, 1 November 2018

நீட்' நுழைவு தேர்வு பதிவு துவங்கியது!!!

 *பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான,
'நீட்' நுழைவு தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, நேற்று நள்ளிரவில் துவங்கியது.பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இந்திய மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்*


*இந்த நுழைவு தேர்வை, மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தியது.இந்த ஆண்டு முதல், தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., நடத்துகிறது. நீட் தேர்வுக்கான அட்டவணை, என்.டி.ஏ., சார்பில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது*


*மே, 5ல், நாடு முழுவதும், நீட் தேர்வு நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகும். இந்த முறை, தமிழ் உட்பட, 10க்கும் மேற்பட்ட, மாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது*


*இந்நிலையில், தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, நேற்று நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல் துவங்கியது*


*என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், வரும், 30ம் தேதி வரை பதிவு செய்யலாம்*


*மாணவர்களின் வசதிக்காக, நாடு முழுவதும், 2,697 பள்ளிகளில், தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு எழுதுவதற்கு, 'ஆதார்' கட்டாயம் இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது*


*நீட் தேர்வில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டாலும், அவற்றில், மொழி மாற்ற பிழைகள் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ள வினாத்தாளின் அடிப்படையிலேயே, பதில் எழுத வேண்டும்*


 *அதன் அடிப்படையிலேயே விடை திருத்தம் செய்யப்படும் என, மத்திய மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது*

No comments:

Post a Comment