Thursday, 1 November 2018

5TH ODI: வெஸ்ட் இண்டீஸை நொறுக்கி இந்தியா அபார வெற்றி!


திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மே.இ. அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பவல் ரன் எதுவும் எடுக்காமல் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மே.இ. அணியின் முக்கிய வீரரான ஹோப்பும் ரன் எதுவும் எடுக்காமல் பூம்ராவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இந்திய பந்துவீச்சாளர்கள் தீப்போல் தொடர்ந்து பந்துவீச, மே.இ. அணியால் சரிவைத் தடுத்த நிறுத்த முடியாமல் போனது. இதனால் வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தன.

இறுதியில் மிகவும் சிரமப்பட்டு அந்த அணி, 31.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



இதனையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை நாளா பக்கமும் சிதறடித்தனர்.
ரோஹித் ஷர்மா அரை சதம் கடந்து அசத்தினார். இந்திய அணி 14.1 ஓவர்களில் 105-1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

No comments:

Post a Comment