Wednesday, 28 November 2018

ஆசிரியை கையை பிடித்து முறுக்கிய 10 ம் வகுப்பு மாணவன்....

காஞ்சீபுரம் கல்வி மாவட்டத்தில்,  அய்யங்கார்குளம் அரசு மேனிலைப்பள்ளியில்
இன்று(27-11-2018) மாலை 4.40 மணிக்கு, அட்டவணைப்படி ஆங்கில சிறப்பு வகுப்பினை ஆசிரியை ஹேனா ஜீன் நடத்திக் கொண்டிருக்கும் வகுப்பை விட்டு தானாக வெளியே செல்ல,  இருக்கையைவிட்டு எழுந்து சென்ற கோகுல்ராஜ் என்ற மாணவனை, வகுப்பு நேரத்தில் வெளியே போகக்கூடாது, உள்ளே போ எ கையைநீட்டி ஆசிரியை கூறியுள்ளார்.
உடனே அந்த மாணவன் ஆசிரியை வலது கையை பிடித்து முறுக்கி தள்ளி விட்டுள்ளான்.கடந்த வாரம் இதே வகுப்பு மாணவர் உடைந்த நாற்காலியை ஆசிரியை அமர போட்டு வைக்க, இதே ஆசிரியை கீழே விழுந்து 3நாள் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்.
ஆசிரியர்கள் இரு சக்கர வாகன இருக்கையை கிழிப்பது, பிரேக் ஒயரை துண்டிப்பது, பெட்ரோல் டாங்கில் சர்க்கரை போடுவது , முட்டை வீசுவது, பிளாஸ்டிக் பாம்பை ஆசிரியர் மீது வீசி அலற வைப்பது, ஒருமையில் பேசுவது, வகுப்பு  நடக்கும் போது கல் வீசுவது, படிக்கட்டில் இறங்குபொழுது ஆசிரியர் மீது பிடித்து தள்ளுவது, வகுப்பில் பட்டாசு வெடிப்பது,  போதைப்பொருள்களை சாப்பிட்டு விட்டு வகுப்பில் படுத்து கிடப்பது உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்தும் தலைமை ஆசிரியர் எதனையும் கண்டு கொள்ளாததால், தலைமை ஆசிரியர் மீதும் தவறு செய்த 22 மாணவர்கள் மீதும் காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியரிடமும் கல்வித்துறை CEO விடமும், கடந்த வாரம் ஊர் மக்களும், பெற்றோர்களும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இன்று மாணவன் கோகுல்ராஜால் தாக்கப்பட்ட ஆசிரியை காஞ்சீபுரம் அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சைக்குப்பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இப்பள்ளியில் இருபால் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பபற்ற நிலை உள்ளதால் தவறு செய்யும் மாணவர்கள் மீதும் எதையும் கண்டு கொள்ளாமல் மாணவர்கள் பிரச்சினை வளர காரணமான தலைமை ஆசிரியரை மாற்றவும் பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும், ஆசிரியர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களாக காவல் துறையின் பாதுகாப்புடன் பள்ளி நடந்து வருவதும், யாருக்கு எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனும் ஆசிரியர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகவல்களை பதிவிடுவது.
டி. ஜஸ்டின் ராஜ்
பாதிக்கப்பட்ட ஆசிரியை கணவர்.
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.

No comments:

Post a Comment