Wednesday, 10 October 2018

அப்துல்கலாமை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டால் மாணவர்கள் அனைவரும் சாதிக்கலாம்: இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் பேச்சு..


அன்னவாசல்,அக்.10: கிராமப்புறத்தில் பயிலக்கூடிய ஒவ்வொரு மாணவரும் அப்துல்கலாமை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டால் சாதிக்கலாம் என இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் பேசினார்..

*சென்னை கலாம் அறப்பணி நல் இயக்கத்தின்* சார்பில் உருவம்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு அபாகஸ் கற்றல் கருவிகள் புதன் கிழமை வழங்கப்பட்டன..
   
 நிகழ்ச்சிக்கு  அன்னவாசல் வட்டாரக்கல்வி அலுவலர்கள் அரு.பொன்னழகு,பெ.துரையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..பள்ளித்தலைமை ஆசிரியர் ஜெ.சாந்தி வரவேற்றுப் பேசினார்..

    விருது வழங்கி இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் பேசியதாவது: பொதுவாக அபாகஸ் என்பது எண்களை விஷீவலாக பார்த்து மனதில் புரிந்து மூளையில் பதிய வைக்கும் ஒரு வகையான கணித முறை ஆகும்..இந்த முறையில் எண்களை கணிதத்தை எளிமையாக கற்றுக் கொள்ள முடியும்..அதோடு பிரைன்ஸ்கில் என்று சொல்லக் கூடிய மூளைவளர்ச்சி அபாரமானதாக இருக்கும்..அபாகஸை முழுமையாக கற்றுக் கொண்ட ஒருவரால் எவ்வளவு பெரிய கடினமான கணக்கிற்கும் கூட கால்குலேட்டரை விட வேகமாக விடை காணமுடியும்..அதுமட்டுமல்லாமல் அபாகஸ் பயின்ற மாணவ,மாணவியருக்கு கான்சென்ட்ரேஷன் பவர் என்று சொல்லக் கூடிய மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி அதிகரிக்கிறது...அபாகஸ் கல்வி கற்றுக் கொண்டவர்கள் கல்வி மட்டுமன்றி சொந்த வாழ்க்கையிலும் சிக்கலான நேரங்களிலும் உடனடியாக முடிவெடுக்க கூடிய திறன் மிக்கவர்களாக இருப்பார்கள் என்றார்..மேலும் கிராமப்புறத்தில் பயிலக்கூடிய ஒவ்வொரு மாணவர்களும் அப்துல்கலாமை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டால் அனைவரும் சாதிக்கலாம் என்றார்.

கலாம் அறப்பணி நல் இயக்கத்தின் நிறுவனர் தலைவர்  *சுதா* கூறியதாவது:
 கலாம் அறப்பணி நல் இயக்கத்தின் சார்பில் குழந்தைகளுக்கு மதிப்பெண்அடிப்படையில் இல்லாமல் மதிப்புகளின் அடிப்படையில் குழந்தைகளை தேர்வு செய்து வளரும் நேர்மறை சிந்தனையாளர் விருதும்,மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நேர்மறை சிற்பி விருதும்,சமுதாயத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த ஒளிரும் நேர்மறைசிந்தனையாளர் விருதும் வழங்கி கொண்டிருக்கிறோம்..கலாம் அறப்பணி நல் இயக்கமானது அக்டோபர் 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு திருச்சி கரூர்,காஞ்சிபுரம்,ராமநாதபுரம்,புதுக்கோட்டை ,சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு விருதும் அபாகஸ் உபகரணங்களும் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் வழங்கி கொண்டிருக்கிறோம்.எங்களது முக்கிய நோக்கம் நேர்மறை எண்ணங்களை அரசுப் பள்ளி மாணவர்களிடம் விதைக்க வேண்டும் மற்றும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.கலாம் அய்யா விட்டுச் சென்ற பாதையில் தொடர்ந்து  செயல்பட வேண்டும் என்பதே என்றார்..

விழாவில்
 ஆசிரியர்கள் மற்றும் 30 மாணவர்களுக்கு இந்தியன் அபாகஸ் உபகரணங்கள் மற்றும் பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டது.
 

பின்னர் கல்வியாளர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சதீஸ்குமாருக்கு ஒளிரும் நேர்மறை சிந்தனையாளர் விருதும்,தலைமை ஆசிரியர் ஜெ.சாந்தி,ஆசிரியர் கு.முனியசாமி ஆகியோருக்கு நேர்மறை சிந்தனை சிற்பி விருதும், ஒவ்வொரு வகுப்பிலும் அனைத்து திறன்களிலும் சிறந்து விளங்கும் ஒரு மாணவருக்கு வளரும் நேர்மறையாளர் விருது மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது..
 
விழாவில்  இலுப்பூர் கல்விமாவட்ட பள்ளி ஆய்வாளர் கி.வேலுச்சாமி,கல்வியாளர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சி.சதீஸ்குமார்,அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராசு,வட்டார வளமைய பயிற்றுநர் த.கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் கலாம் அறப் பணி நல் இயக்க செயலாளர் பார்த்தசாரதி,பட்டய கணக்கர் சங்கர்,நிர்வாகிகள் ஜெயசுடர்விழி,கார்த்திக்கேயன்,விஷ்ணுநாராயணன் மற்றும் நிலையபட்டி தலைமை ஆசிரியர் இரவிச்சந்திரன் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அறக்கட்டளையின் சார்பில் ஆசிரியர் கு.முனியசாமிக்கு பட்டுக்கோட்டையில் உள்ள இந்தியன் அபாகஸ் பயிற்சி மையத்தில் இரண்டு நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

No comments:

Post a Comment