Wednesday, 31 October 2018

இன்று சர்தார் படேலின் பிரமாண்ட சிலை திறப்பு...!!

குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள, 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படும், மறைந்த, சர்தார் வல்லபாய் படேலின், 597 அடி உருவ சிலையை, பிரதமர், நரேந்திர மோடி, இன்று திறந்து வைக்கிறார். உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமை, இதற்கு கிடைக்கவுள்ளது.



குஜராத் மாநிலத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல், சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார்.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு சுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல், 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்படுகிறார்.

இரும்பு மனிதரின் "ஒற்றுமையின் சிலை"

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லப் பாய் படேல் பிறந்த நாளான இன்று அவருடைய பிரம்மாண்ட உருவ சிலை திறக்கப்பட உள்ளது.

நர்மதா மாவட்டம் சாது பெட் தீவில் அமைந்துள்ள சிலை 183 மீட்டர் உயரம் உடையது.

இது உலகின் மிக உயரமான சிலை ஆகும். ஒற்றுமையின் சிலை என கூறப்படும் இந்த சிலையை இன்று காலை 11.30மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

No comments:

Post a Comment