Monday, 29 October 2018

முக்கிய செய்தி ஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி...... தூத்துக்குடியில் காற்று மாசு குறைந்துள்ளது: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை...!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடப்பட்டதால் காற்று மாசு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் காற்று மாசு குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடியில் காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 



ஆய்வு நடத்தப்பட்ட இடங்கள் 
தூத்துக்குடியில் 8 இடங்களில் காற்று மாசு அளவிடப்பட்டதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் சிப்காட் தொழில்வளாகம், குமரெட்டிபுரத்தில் காற்று மாசு அளவிடப்பட்டது. வீரபாண்டிபுரம், மீளவிட்டான் கிராமம் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது. தூத்துக்குடி துணைமுன்னிலையம் அமைந்துள்ள இடம், அன்பு நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்று மாசு குறித்து நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். 

என்னென்ன சோதனைகள்?
காற்றில் கந்தக டைஆக்சைடு, நைட்ரஜன்வாயு, அமோனியா உள்ளதா என சோதிக்கப்பட்டது. நிக்கல், ஆர்சனிக், பென்சீன், ஹைட்ரஜன் உள்ளதா என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

No comments:

Post a Comment