Monday, 8 October 2018

நீரிழிவு நோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்.?!

சரியான அளவிலான உடற்பயிற்சியும், உடல் உழைப்பும்
இல்லாமையே நீரிழிவு வருவதற்கான முக்கியமான அடிப்படைக் காரணம் ஆகும். மேலும், இந்தியப் பெண்கள் திருமணத்திற்குப் பின் தங்களது உடல் எடை அதிகரிப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

உடல் பருமன் நீரிழிவு நோய்க்கு மற்றுமொரு முக்கிய காரணியாக உள்ளது. பெண்கள் கருவுற்றிருக்கும்போது ரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய் இவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைப் பிறந்தவுடன் இந்நோய் குணமடைந்துவிடுகிறது.

இதற்கான காரணம் என்ன? குழந்தைக் கருவுற்றிருக்கும் போது தாயின் உடல் எடை 7 முதல் 8 கிலோ வரை மட்டுமே அதிகரிக்க வேண்டும்.

ஆனால், குழந்தைக்கும் சேர்த்து உணவு உண்ண வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவதாலேயே அதிக அளவு உணவு எடுத்துக்கொள்வதால் தாயின் உடல் எடை 25 கிலோ வரை அதிகரித்து விடுகின்றது.

பிரசவத்திற்கு பின்பும் ஏறிய உடல் எடையை குறைப்பதில் பெண்கள் கவனம் செலுத்துவதில்லை. இதன் காரணமாகவே 40 வயதிற்குப்பின் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் நீரிழிவு நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ளலாம்.. யோகா, நடனம், விளையாட்டு, உடற்பயிற்சிகள் மற்றம் ஏரோபிக் போன்ற ஏதேனும் ஒன்றில் ஈடுபடுவதன் மூலம் தனது உயரத்திற்கு ஏற்ற எடையினை பராமரிக்க வேண்டும்.

உணவுகள் மீந்துவிட்டதே என்பதற்காக அதிக அளவில் உண்ணக்கூடாது. அவ்வாறு செய்வதாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment