Tuesday, 9 October 2018

போக்குவரத்து ஊழியர்களுக்குச் சம்பளம் பிடித்தம்!


சென்னையில் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, 4,000 ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம் அபராதம் விதித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில அமைப்புகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதனால் தொமுச, சிஐடியு போன்ற அமைப்புகளைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் ரூ.500 வரை அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று (அக்டோபர் 8) சென்னையில் பேருந்து இயக்கிய பல்வேறு ஒட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம், பல்வேறு விதமாக இந்த அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சற்றுத் தள்ளி நிறுத்தியது, தாமதமாகப் பேருந்துகளை இயக்கி வந்தது போன்ற காரணங்களுக்காகச் சில ஊழியர்களிடம் இருந்து இந்த அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல்வேறு காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment