Tuesday, 9 October 2018

8ம் வகுப்பு வரை படித்த இளைஞர் பாராகிளைடர் தயாரித்து சாதனை.! வெளிநாட்டினரும் அதிர்ச்சி!


"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்"

1.5 அடியில் நீளத்தில் உள்ள இந்த திருக்குறளுக்கு தற்போது விளக்கியுள்ளார் ராஜா ஞானப்பிரகாசம். விளக்குவது என்றால், திருக்குறளுக்கு உண்டான பொருளை நேரடியாக விளக்குவது அல்ல.இந்த திருக்குறள் கூறியுள்ள கருத்துகளை எடுத்து தான் வாழ்வில் மெய்ப்பிது.

திருக்குறள் உண்மையான விளக்கம் இதோ நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பவர் உறுதி உடையவர் என்று அர்த்தம்.

இவரின் செயல்களை பார்த்தால் நமக்கே ஒரு நிமிடம் உடல் சிலிர்க்கின்றது. இவரை போல நாமும் நினைத்ததை செய்து முடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இவரை பெயரை வைத்தே ராஜா திடமான மனநிலையும், ஞானம் (அறிவு) பிரசாசம் (பிரதிபலித்தல்) உள்ளதையும் நம்மால் இங்கு காண முடியும்.

ராஜா ஞானபிரகாரசம்:
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வயலூரைச் சேர்ந்வர் அருள்பிரகாரசம் மகன் ராஜா ஞானப்பிரகாசம் (37), விவசாயி. 8ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின் தொலைநிலைக் கல்வி மூலம் எம்.ஏ வரலாறு முடித்துள்ளார்.


 கனவு:
சிறு வயதில் இருந்தே வானில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், ராஜா ஞானப்பிரகசாம் புத்தகங்களையும், யூடியூப் கூகுள் போன்ற வலைதளத்தை பார்த்து, பரவ் பாரா கிளைடத் தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக தனது நண்பர்களாக லலித்குமார், சங்சர் உள்ளிட்டோருடன் சேர்ந்து அருகே இருந்த பட்டரையில் பாரா கிளைடர் தயாரிக்கும் பணியில் இறங்கினார்.


 12 ஆண்டுகள் இடைவிதா முயற்சி:
தனக்கு வேண்டிய உதிரிபாகங்களங், கிடைத்த பொருள்கள் கொண்டு தானனே இதை தயாரித்தார். 12 ஆண்டுகள் இடைவிடாத முயற்சியில் முதல் பவர் பாரா கிளைடர் தயாரித்து 20 விநாடிகள் பறந்துள்ளார்.


 ரூ.60 ஆயிரத்தில் தயாரிப்பு:
வெளிநாடுகளில் பாரா கிளைடர்கள் சுமார் ரூ.8 லட்சம். இவர் தயாரித்துள்ள முதல் கிளைடர் ரூ_60 ஆயிரம் தான். தற்போது வஇரிடம் உள்ள பாரா கிளைடர் சுமார் 4.30 மணி நேரம் சாதாரண பெட்டோரல எரிபொருளாக பயன்படுத்தி மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


 2 பேர் பறக்கும் பாராகிளைடர்:
பின்னர் 290 சிசி என்ஜின் பொருத்தி இவவர் பறக்கும் வகையில் மற்றொரு பாராகிடைரை தயாரித்தார். இதிலும் சிறப்பாக விண்ணில் பறந்தத்தன் பலனாக தற்போது மதுரை, கோவை, ராஜபாரளயம் என ஊருக்கும் சென்று வானில் பறக்க வேண்டும் என ஆசைப்படுவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கி வருகிறார். மேலும் 3 பேர் பயணிக்கும் வகையில் பாராகிளைடர் வடிவமைத்து வருகின்றனர்.


 ராஜா ஞானப்பிரகாசம் கூறியதாவது:
உலகின் பவர் பாராகிளைடர் ஒருவர் மற்றும் இருவர் பறந்து செல்லும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் செல்லும் வகையில் பாராகிளைடர் இல்லை. அதை தற்போது தயாரித்து வருகிறேன்.

இது 360 கிலோ எடையை சுமந்து பயணிக்கும். இதற்காக இன்ஜின்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளேன். தரையில் செல்லும் தோனைகள் அனைத்தும் முடித்து விட்டது.

விரைவில் பாரா சூட்டில் இணைத்து விண்ணில் பறக்க ஏற்பாடு செய்து வருகிறேன். சுமார் முப்பது அடி சுற்றளவுள்ள இடம் இந்தாலே பாராகிளைடரை இறக்கம், பறக்கவும் முடியும். இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டாலும் பாதுகாப்பாக இறங்கலாம்.


 காப்புரிமை கோரியுள்ளேன்:
எனது தயாரிப்புகளுக்கான காப்புரிமைக்கு அனுமதி கோரியுள்ளேன். பள்ளி கல்லூரிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு பாராகிளைடரை வடிவமைப்பது குறித்தும், பறப்பது குறித்து பயிற்சி அளித்து வருகிறேன். இதற்கு கட்டணம் எதுவும் பெறுவதில்லை என ராஜா ஞானப்பிரகசாம் தெரிவித்துள்ளார்.


 அனிமா மீட்டர், அல்ட்டோ மீட்டர்:
ராஜா ஞானப்பிரகாசம் வடிவமைத்துள்ள பாராகிளைடரில் காற்றின் வேகத்தை கணக்கிடும் அல்ட்டோ மீட்டர், உயரத்தைக் கணக்கிடும் அனிமா மீட்டர் இணைக்கப்பட்டுள்ளது.


 விமான போக்குவரத்துறையிடம் அனுமதி:
விமான நிலையங்களில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டருக்கு யாரும் பயணிக்க கூடாது என்ற விதிமுறையை பின்பற்றும் இவர் பாராகிடைரில் பறக்க மத்திய அரசின் விமான போக்குவரத்துறையிடம் ஏர் டிராபிக் அனுமதியும் பெற்றுள்ளார். இவர் கண்டுபிடிப்பு வெளிநாட்டினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment