Tuesday, 23 October 2018

யோகாவில் 14 உலக சாதனைகள் படைத்த திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த 9 வயது சிறுமி!


நெல்லை கலெக்டர் ஷில்பா சதீஷ் விருது வழங்கி கௌரவிப்பு.

யோகாவில் பல்வேறு சாதனைகளை படைத்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ப்ரிஷாவுக்கு, ஸ்வஸ்த் பாரத் யாத்ரா விழாவில் நெல்லை கலெக்டர் ஷில்பா சதீஷ் விருது வழங்கி கௌரவித்தார்.திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுமி ப்ரிஷா. 9 வயதான இவர் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.


ப்ரிஷாவுக்கு 1 வயதாக இருந்தபோதே அவரது தாயாரும், பாட்டியும் அவருக்கு யோகா கற்றுக் கொடுக்க துவங்கியுள்ளனர். அதனால், பள்ளியில் நடைபெற்ற யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார்.

 தொடர்ந்து,மாவட்ட,மாநில அளவிலான போட்டிகளிலும்நூற்றுக்கணக்கான பதக்கங்களையும், விருதுகளையும் ப்ரிஷா வென்றுள்ளார்.இதுவரை 14 உலக சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.


யோகா வல்லுநர்களே செய்ய கஷ்டப்படும் பல ஆசனங்களை இந்த சிறுமி மிக எளிதாக செய்து விடுகிறார்.


 நெல்லையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட கலெக்டர் ஷில்பா சதீஷ், ப்ரிஷாவுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.


 இந்த விழாவில், இந்திய யோகா பெடரேஷனின் துணைத் தலைவர் யோகியர் ராமலிங்கமும் கலந்து கொண்டு சிறுமியை வாழ்த்தினார்.

No comments:

Post a Comment