Friday, 14 September 2018

BREAKING NEWS* 8 வழி சாலை திட்டத்திற்கு தடை.! அன்புமணி தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு.!!


சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவது, மரங்களை வெட்டுவது என்ற மோசமான நடவடிக்கையில் ஈடுப்பட்டால், அந்த சாலை திட்டத்திற்கே மொத்தமாக தடை விதிக்கப்படும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை எச்சரித்தது.

பசுமை வழி சாலை என்ற பெயரில் சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய நிலங்கள், பாரம்பரியமாக கட்டப்பட்ட வீடுகள் என கையகப்படுத்தப்பட்டன. இதற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கோபமாக சில கேள்விகளை எழுப்பியது.

அதில், தடையை மீறி 8 வழிச் சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டுவதா? சாலைக்காக மரம் வெட்டினால் முறையான காரணம் சொல்ல வேண்டும். திட்டத்தின் அறிக்கையில் எங்கும் மரம் வெட்டுவதாக ஏன் கூறவில்லை. திட்டத்தில் அப்படி இருக்கும் பகுதிகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

எந்த சூழ்நிலையில் மரம் வெட்டப்படுகிறது என்று கூற வேண்டும் எனவும் தேவையில்லாமல் மரங்களை வெட்ட கூடாது எனவும் சேலம் சாலைக்காக மரங்களை வெட்டியது ஏன் எனவும் மரங்களை வெட்டமாட்டோம் என்று கூறிவிட்டு வெட்டியது ஏன் எனவும் கூறிய நீதிமன்றம் தமிழக அரசின் நடவடிக்கை முறையற்றது எனவும் கூறியுள்ளது.

நிலம் அளவிடுவதாக கூறிவிட்டு ஏன் கையகப்படுத்தினீர்கள்? உங்கள் நிலத்தை கையகப்படுத்தினால் பொறுத்துக் கொள்வீர்களா? என்று அரசு வக்கீலிடம் நீதிபதிகள் அதிரடி கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு இப்படியே செயல்பட்டால் திட்டத்திற்கே தடை விதிக்க வேண்டி வரும். தமிழக அரசு சேலம் சாலையால் ஏற்படும் சமூக பாதிப்பு குறித்து ஆய்வு அறிக்கை செய்ததா? அப்படியென்றால் அந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். தமிழக அரசு இதில் உடனடியாக பதிலளிக்க வேண்டும், இல்லையென்றால் இந்த சாலை திட்டத்திற்கு நிரந்தரமாக தடை விதிக்க நேரிடும் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் வந்த போது, மத்திய அரசு ஒரு அறிக்கை தாக்கல் செய்தது, அதில், ''இந்த 8 வழி சாலை திட்டத்தை மாற்றி அமைக்க இருப்பதாகவும், இந்த திட்டத்தின் திட்ட மதிப்பை குறைக்க இருப்பதாகவும், இந்த அறிக்கையில் உள்ளவைகள் அனைத்தும் கருத்துரு மட்டும் தான், இதில் எந்த இறுதி முடிவும் எடுக்கபடவில்லை'' என்றும் அந்த அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை குறித்து நீதிபதிகள் தெரிவிக்கையில், ''மத்திய அரசின் இந்த அறிக்கையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளது. இதை காரணமாக கொண்டு இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு, ஏன் தடை விதிக்க கூடாது?'' என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''சேலம் சென்னை 8 வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்து இருப்பதாகவும், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை பணிகளை தொடங்க மாட்டோம். இன்னும் இரு வாரங்கள் நிலம் கையப்படுத்தப்படும் பணி நிறுத்திவைக்கப்படும்'' என்றும் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment