Friday, 14 September 2018

அதிசக்தி வாய்ந்த புயலின் தாக்கம் ஆரம்பம்...! பீதியில் திகைத்து நிற்கும் மக்கள்..!!


அமெரிக்காவில் தற்போது மழை காலம் தொடங்கி உள்ளது. அங்கு அடிக்கடி புயல் உருவாகி தாக்குவது உண்டு.
அமெரிக்காவில் உருவாகியுள்ள புயலுக்கு புளோரன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு நகரங்களில் ஃபுளோரன்ஸ் புயல் தாக்கி வருகிறது. அமெரிக்காவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் புயலாக இது இருக்கும் என தெரிகிறது.


அடுத்த 48 மணி நேரத்தில் புயல் அமெரிக்காவை பல பகுதியை தாக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் கரோலினா பகுதியில் இந்த ஃபுளோரன்ஸ் புயலின் தாக்கம் தொடக்கி விட்டது. இன்னும் மற்ற பகுதிகளையும் இது விரைவில் தாக்க அபாயம்.


இந்த புயல் 215 கி.மீக்கு அதிகமாகப் புயல் காற்று வீசும் என்றும், கடல் அலைகள் 12 அடி உயரத்துக்கு மேலாக எழும்பும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
வானிலை மையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கிழக்குப் பகுதியில் இருக்கும் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.


இந்தப் புயலின் சாட்டிலைட் பதிவுகளை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டிருக்கிறது.
முன்னதாக இந்தப் புயல் பற்றி ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``பல வருடங்கள் கழித்து கிழக்குப் பகுதியைப் புயல் தாக்க இருக்கிறது. இது மோசமான புயலாக இருக்கக்கூடும். மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

No comments:

Post a Comment