Saturday, 15 September 2018

தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் புகார்: ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை


தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
மீது மாணவர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, அப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக மாணவர்கள் அளித்த புகார் மனு:
ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சரிவர பணியாற்றவில்லை. மாணவ-மாணவிகளுக்கான இலவச திட்டங்களை செயல்படுத்துவதிலும், பள்ளியின் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதிலும் அலட்சியம் காட்டி வருகிறார். பள்ளியில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால், 10, 12-ம் வகுப்புகளில் முழுத்தேர்ச்சி பெறமுடியாமல் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் குறைந்துவிட்டது.

No comments:

Post a Comment