Saturday, 15 September 2018

சுழட்டி, சுழட்டி அடிக்கும் புளோரன்ஸ் புயல்..! கொந்தளிக்கும் கடல் அலை..!


அமெரிக்காவில் உருவாகியுள்ள புயலுக்கு ஃபுளோரன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு நகரங்களில் ஃபுளோரன்ஸ் புயல் தாக்கி உள்ளது. அமெரிக்காவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் புயலாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் கரோலினா பகுதியில் இந்த ஃபுளோரன்ஸ் புயலின் தாக்கம் தொடக்கி விட்டது. இன்னும் மற்ற பகுதிகளையும் இது விரைவில் தாக்க அபாயம்.

இந்த புயல் 215 கி.மீக்கு அதிகமாகப் புயல் காற்று வீசும் என்றும், கடல் அலைகள் 12 அடி உயரத்துக்கு மேலாக எழும்பும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வானிலை மையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கிழக்குப் பகுதியில் இருக்கும் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்தப் புயலின் சாட்டிலைட் பதிவுகளை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில், குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.

No comments:

Post a Comment