Saturday, 15 September 2018

மாணவர் சேர்க்கை அதிகரிக்க அவகாசம் குறைவு:அடுத்தகட்ட நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான காலஅவகாசம்
குறைந்து வருவதால், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பள்ளி நிர்வாகங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது*


*துவக்கம் முதல் மேல்நிலை வரை உள்ள அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் மாணவர் விகிதம் அடிப்படையில், மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளை இணைக்க அரசு திட்டமிட்டது*


*இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறை அதிகாரிகள், மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளின் பட்டியல் அனுப்பப்பட்டது. ஒவ்வொரு வட்டாரத்திலும் குறைந்தபட்சமாக, 4 பள்ளிகள் இப்பட்டியலில் இடம் பெற்றன*


*மேலும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில், மாணவர் எண்ணிக்கை குறைவான பள்ளிகளில் இருந்த கூடுதல் ஆசிரியர்கள், வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.பள்ளிகளை இணைப்பதனால், மீண்டும் 'சர்ப்பிளஸ்', அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்*



*இதற்கு, தீர்வாக, மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம், ஆசிரியர்களுக்கான மாறுதல் மட்டுமின்றி, பள்ளிகளை இணைக்கும் திட்டத்தையும் அரசு கைவிடும் என அறிவிக்கப்பட்டது*


*மாணவர்களுக்கான சேர்க்கை நடத்த, ஆக., மாதம் வரை மட்டுமே வழக்கமாக அவகாசம் வழங்கப்படும். நடப்பாண்டில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, செப்., மாத இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது*


 *இந்நிலையில், நடப்பாண்டில், 'கிண்டர் கார்டன்', வகுப்புகளும் பள்ளிகளில் துவக்கப்படும் என்ற அறிவிப்புகளும், பள்ளி நிர்வாகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது*


*தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ''பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தான், மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். சில பகுதிகளில், குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பள்ளிகளிலும் சரிந்துள்ளது*


*அரசு வழங்கிய அவகாசம் நிறைவு பெற குறுகிய நாட்கள் மட்டுமே உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, பள்ளிகளில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது*


*அரசு எடுக்கும் நடவடிக்கை அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாக இருக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது,'' என்றார்*


No comments:

Post a Comment