Thursday, 13 September 2018

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் மாற்றம் புதிய அறிக்கை தாக்கல் !!

சென்னை–சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை, ரூ 10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த 🏛மத்திய, மாநிலஅரசுகள் முடிவுசெய்தன. இதன் முதல்கட்ட பணிகள் துவங்கிய நிலையில் மக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு வந்தது. இதற்கிடையே தேசிய
நெடுஞ்சாலைகள்ஆணையம் 8 வழிச்சாலை திட்டத்தில்சில மாற்றங்கள்செய்து, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறது. அந்த அறிக்கையில், "இந்த திட்டத்திற்கு முதலில் 2 ஆயிரத்து 560ஹெக்டெர் நிலம்கையகப்படுத்தவிருந்த நிலையில்🙄, தற்போது அது1,900 ஹெக்டராக குறைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சில இடங்களில் அமைக்கப்பட இருந்த 🛣8 வழிச்சாலையை, 6 வழிச்சாலையாக மாற்றி அமைத்திருக்கிறோம். எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் போன்ற தேவைகள்அடிப்படையில் இப்பகுதியில் 🛣8 வழிச்சாலை அமைய வாய்ப்பு உள்ளது. முக்கியமாக பாலாற்றின் குறுக்கே மட்டுமே பாலம் அமைக்கப்படும். வேறு இடங்களில் பாலம் அமைக்கவேண்டிய சூழல் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment