Friday, 7 September 2018

அப்போலோ நிர்வாகத்திற்கு 7 நாள் கெடு..! நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதிரடி..!!


ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை அளித்தனர். கடைசியில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சென்ற வருடம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளர், சசிகலா, உயர் காவல் அதிகாரிகள், மருத்துவர்கள் உட்பட பலரிடமும் விசாரணை செய்தது.

இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான சிசிடிவி காட்சிகளை, 7 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து உயிரிழந்த நாள் வரை பதிவான அனைத்து காட்சிகளையும் 7 நாட்களுக்குள் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி, அப்போலோ நிர்வாகத்திற்கு கெடு விதித்துள்ளது.

No comments:

Post a Comment