Friday, 14 September 2018

அதிகாரி கூறிய அந்த ஒரே ஒரு வார்த்தை.! 57 பேர் உடல் நசுங்கி பலி.!! இந்திய நாட்டின் கொடூர பேருந்து விபத்து.!!


தெலுங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து கொண்டாகட்டு என்ற இடத்திலிருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 52 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.



தெலங்கானா மாநிலம் ஜாக்தியால் மாவட்டத்தின் கொண்டாகட்டு பகுதி மலையின் மீது உள்ள ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆன்மீக ஸ்தலமாகும். நேற்று காலை ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு, திம்மப்பேட்டையில் இருந்து சனிவார்பேட்டை என்ற இடத்துக்கு 104பேருடன் சென்றுக்கொண்டிருந்த தெலுங்கானா மாநிலத்தின் அரசுப் பேருந்து மலைச்சாலையில் திரும்பிக்கொண்டிருந்தது.



அப்போது கொண்டாகட்டு பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் பேருந்து திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 45 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இதில் 28 பெண்களும், 8 குழந்தைகளும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



உடனடியாக பேருந்தில் சிக்கி காயமடைந்தவர்கள் அருகில் இருந்தவர்களாலும், காவல்துறையினராலும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மேலும் சிலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 57 ஆகி உயர்ந்தது. இந்நிலையில், நாட்டையே குலைநடுங்க வைத்த இந்த கோரவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், இந்த விபத்துக்கு காரணம், பேருந்தின் ஓட்டுநர் உடல்நிலை சரியில்லாமல் நேற்று விடுமுறை கேட்டும், ஆள் இல்லாத காரணத்தினால், உடல்நலக்குறைவோடு அந்த ஓட்டுநர் பேருந்தை ஓட்டியதுதான் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை சரியில்லை என்று ஓட்டுநர் விடுமுறை கேட்டும், கொடுக்காத காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.



ஓட்டுனர்களுக்கு போதிய ஓய்வு கொடுக்க தவறியதன் காரணத்தால் அப்பபவிகள் 57 பேரும், அந்த பேருந்தின் ஓட்டுனரும் கால் நசுங்கி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒரு அரசு அதிகாரியின் அலட்சிய போக்கால் இன்று 57 உயிர்கள் பலியாகியுள்ளது. இந்நிலையில் விபத்து தொடர்பாக கொண்டக்கட்டு போக்குவரத்து மண்டல அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment