Sunday, 16 September 2018

தமிழகம்: 2 நாட்களுக்கு பெருமழை!


தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய பெருமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த வரையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 செ.மீ மழையும், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 5 செ.மீ மழையும், சிவகாசியில் 13 செ.மீ. மழையும் ஸ்ரீவில்லிபுத்தூர், வேலூரில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது

இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் வடமாவட்டங்களில் பெருமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புதுவை, ஆந்திரா கடலோர மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் வங்க கடலின் மத்திய மற்றும் வடக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நிலவி வருகிறது. இது படிப்படியாக வரும் 18ஆம் தேதிக்குள் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதை பொறுத்து தமிழகத்தில் 18ஆம் தேதிக்கு பிறகு அடுத்து வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment