Friday, 10 August 2018

ஒரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்கள்

 *🔴ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே முத்துராமலிங்கபுரத்தில் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியில், ஒரு மாணவர் மட்டும், 1ம் வகுப்பு படித்து வருகிறார்*


*🔴இவருக்கு பாடம் நடத்த தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் உள்ளனர்*


 *🔴முத்துராமலிங்கபுரத்தில் உள்ள பெரும்பாலான மாணவர்கள், அருகே, விளாத்திகுளம், சாயல்குடி பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்*


*🔶🔶விழிப்புணர்வு*


*🔴ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவுக்கூடம், தீ தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தும் மாணவர் சேர்க்கையின்றி, ஒரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.கிராம மக்கள் கூறியதாவது*


*🔴கல்வித்துறையினர் மாணவர் சேர்க்கை குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் உள்ளனர். கடந்த, 2014ல், எட்டு மாணவர்கள் இருந்த இந்த பள்ளியில், தற்போது ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார்*


 *🔴அந்த மாணவரும் ஏதாவது காரணத்தால் பள்ளிக்கு வரவில்லை என்றால், இரண்டு ஆசிரியர்களும் வேலையின்றி இருக்க வேண்டியது தான்.இவ்வாறு அவர்கள் கூறினர்*



*🔶🔶பேச்சு*


*🔴கடலாடி வட்டார கல்வி அலுவலர் வசந்த பாரதி கூறியதாவது:நான் பொறுப்பேற்று, ஒரு மாதம் தான் ஆகிறது. விரைவில் பள்ளிக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டு, குறைகளை நிவர்த்தி செய்யவும், கூடுதல் மாணவர்களை பள்ளியில் சேர்க்கவும் கிராம மக்களிடம் பேச்சு நடத்த உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்*



*🌐🌐ஓராசிரியராகிறது ஈராசிரியர் பள்ளி*


*🔴தமிழகத்தில், 3,000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஒவ்வொன்றிலும், 20க்கும் குறைவான, மாணவர்களே படிக்கின்றனர். இப்பள்ளிகளில், இரு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்*


 *🔴இவர்களுக்கு, இம்மாதம் இறுதி வரை, சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.இருப்பினும், பெரும்பாலான பள்ளி களில், ஒரு புதிய மாணவர் கூட, 1ம் வகுப்பில் சேர்க்கப்படவில்லை*


 *🔴இதனால், ஒரு ஆசிரியரை அதிக சேர்க்கை கொண்ட பள்ளிகளுக்கு, பணியிட மாறுதல் செய்து அறிக்கை சமர்ப்பிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது*


*🔴செப்டம்பர் மாதத்தில், இப்பள்ளிகளை இணைக்கவும் திட்டமிடப்பட்டுஉள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இதற்கு ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது*

Source  தினமலர் நாளிதழ்

No comments:

Post a Comment