Thursday, 9 August 2018

அமேசானுடன் கைகோத்த டிஷ் டிவி!


டிஷ் டிவி நிறுவனம், தனது DTH சேவையில் அமேசான் அலெக்ஸா தொழில்நுட்பத்தின் திறன்களைப் பயன்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஜீ குழுமத்தின் துணை நிறுவனமான டிஷ் டிவி, இந்தியாவில் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சாட்டிலைட்டின் உதவியுடன் தொடர்ந்து 14 ஆண்டுகளாக DTH சேவை வழங்கி வருகிறது. தற்போது இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான அமேசான் அலெக்ஸாவுடன் கைகோத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த சேவையைப் பயன்படுத்தும் பயனர்கள், அலெக்ஸாவின் அமேசான் எக்கோ, எக்கோ ப்ளஸ், எக்கோ ஸ்பாட், எக்கோ டாட் ஆகிய கருவிகளுடன் நடத்தும் உரையாடல்களின் மூலம் டிஷ் டிவியை இயக்க முடியும். இந்தச் சேவையானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் உள்ள அலெக்ஸா செயலியிலும் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

இந்தச் சேவை குறித்து டிஷ் டிவி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அனில் துவா, இந்தியாவின் DTH வரலாற்றில் முதன்முறையாக உரையாடல்களின் மூலம் இயங்கும் தொழில்நுட்பத்தை டிஷ் டிவி அறிமுகம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சேவையில் DTH ரீசார்ஜ் செய்வது, வீடியோக்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல புதிய வசதிகளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment