Friday, 31 August 2018

தேர்வு மைய பரிந்துரை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

தகுதி இல்லாத பள்ளிகளில், பொதுத்தேர்வுக்கான மையம் அமைக்க பரிந்துரைத்தால்,
மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது*
*பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான, முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன*
 *முதற்கட்டமாக, மாணவர்களின் எண்ணிக்கை விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன*
*அதேபோல, மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், புதிய தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து, கருத்துரு அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கடிதம் அனுப்பியுள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது*
*இதுவரை தேர்வு மையம் அமைக்காத பள்ளியில், தேர்வு மையம் அமைப்பது கட்டாயம் என, தெரிந்தால், அதை துறை ரகசியம் காத்து, இயக்குனரகத்துக்கு பரிந்துரைக்க வேண்டும்*


 *பரிந்துரையின் போது, சரியான காரணங்கள் மற்றும் அதற்கான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்*

*மேலும், அந்த பள்ளியில் தேர்வு மையம் அமைப்பதற்கான தகுதிகள், உள் கட்டமைப்பு உள்ளதா என, அரசாணையின்படி ஆய்வு செய்ய வேண்டும்*
*மாறாக, தகுதி இல்லாத பள்ளிகளை தேர்வு மையம் அமைக்க பரிந்துரைத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது, துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்*


No comments:

Post a Comment