Thursday, 30 August 2018

உங்க உடம்பிற்குள் என்ன நோய் இருக்குனு தெரியனுமா ? இதோ அதன் அறிகுறிகள்

நம்முடைய உடலுக்கு வெளியில் ஏதாவது காயங்கள்
இருந்தால் நமக்கு அதிக வலி இருக்கும். சில அறிகுறிகள் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

மேலும் உடலுக்குள் என்ன அறிகுறி இருந்தால், என்ன உறுப்பு பாதிப்படைந்திருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.

கண் உப்பியிருந்தால்



உங்களுடைய கண்கள் உப்பியிருப்பது போல தோற்றம் இருந்தால், உங்களுடைய சிறுநீரகங்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன என்று அர்த்தம்.

இதனை சரிசெய்ய உணவில் வழக்கமாக சேர்த்துக் கொள்ளும் உப்பின் அளவைக் கட்டாயமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல தண்ணீர் குடிக்கும் அளவையும் அதிகரிக்க வேண்டும்.

கண் இமைகள் வலி

உடலில் மக்னீசியத்தின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறிதான் கண் இமைகளில் வலி உண்டாவதற்கான காரணங்கள் ஆகும்.

உணவில் மிக அதிகமாக கொஞ்சம் முட்டைகோஸ் மற்றும் கீரைகளைச் சேர்த்துக் கொண்டால் கண் இமைகள் வலிகளில் இருந்து பாதுகாக்கலாம்

கண்களில் அதிக வெளிச்சம்

கண்களுக்குக் கொடுக்கப்படும் அதிகப்படியான அழுத்தத்தினால், மூளை சற்று குழப்பமடைந்து, தவறான தகவல்களைக் கண்களுக்குத் தந்துவிடுகிறது.

முதுகைக் கூன் போட்டுக் கொண்டிருக்காமல், தோள்களை நேராக நிமிர்த்தி, கண்களை நேராகப் பார்த்து, நிமிர்ந்து நிற்க வேண்டும். அதேபோல் அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

கண்கள் உலர்வது

ஏசி நிறைந்த இடங்களில் நம்முடைய இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவது மற்றும் கண்களுக்கு நாம் கொடுக்கும் அதிக வேலையின் காரணமாக, களைப்படைகின்ற பொழுது, நம்முடைய கண்கள் மிக அதிக அளவில் உலர்ந்து போகின்றன.

தினமும் கண்களை மேலும் கீழுமாகவும் பக்கவாட்டின் இருபுறத்திலும் அசைப்பது போன்ற சின்ன சின்ன பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இந்த எளிய பயிற்சிகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

நகங்கள் வெளுத்துப் போதல்



ரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறைகின்ற போது, சின்னச் சின்ன வேலையை செய்வதற்கும் உடல் பலம் ஏதுமின்றி, போகும். ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் மாறி வெளுத்துக் காணப்படும்.

இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள் மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாத வெடிப்புகள்

தைராய்டு பிரச்னைகள் ஏதேனும் இருந்தாலும் கால் பாதங்களில் வறட்சியான வெடிப்புகள் தோன்றும்.இந்த தைராய்டு சுரப்பிகள் சரியாக வேலை செய்யாத பொழுது, நம்முடைய பாதங்களில் உள்ள தோல்கள் உலர்ந்து போகும்.

தைராய்டு பிரச்னையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் அதிக உடல்எடை அதிகமாதலும் தான். இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

சிவந்த உள்ளங்கை



நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம்முடைய ரத்தத்தில் உள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல், போய்விடும். அதனால் உங்களுடைய ரத்தத்தின் நிறம் அதிக சிவப்பாகிவிடும்.

கீழாநெல்லியை வாரத்தில் ஒருமுறையாவது சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறையும்.

பாதம் மரத்துப்போதல்

சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கலாம். நீரிழிவு ரத்தத்தில் இருக்கும் செல்களை பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது.

பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்களுடைய ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து, நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும்.

முக வீக்கம்



உங்களுடைய உடலில் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளது என்பதள் அறிகுறி தான் முகம் வீக்கமாகக் காணப்படக் காரணம்

ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு கிளாஸ் அளவாவது தண்ணீர் குடிக்க வேண்டும். எப்போதும், வெளியில் எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டிலை உங்களுடன் எடுத்துச் சென்று,அடிக்கடி தண்ணீர் குடியுங்கள்.

தோலில் தடிப்பு

தோலில் தடிப்புகள் உண்டானால் அதை வெறுமனே தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை என்று மட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள். இது இருதய நோயாகக் கூட இருக்கலாம்.

மிக அதிகப்படியான மன அழுத்தம் மாரடைப்பை உண்டாக்குவதற்கான வாய்ப்பை மிக இதிகமாக வழங்குகிறது. உங்களுடைய மனதை எப்போதும், லேசாக பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வது நல்லது.

No comments:

Post a Comment