Sunday, 12 August 2018

பி.எஸ்.என்.எல் அதிரடி ஆஃபர்!


பி.எஸ்.என்.எல். பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான அதிரடி சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டின் 72ஆவது சுதந்திர தினம் வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தனது வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ்கால் மற்றும் டேட்டா சேவைகளை அளிக்கும் சிறப்பு ஆஃபர்களை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. இதன்படி பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.9 மற்றும் ரூ.29 க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் வாய்ஸ்கால் மற்றும் டேட்டா சேவைகளைப் பெறலாம்.

இந்த சலுகையானது ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொலைத் தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பிறகு மற்ற நிறுவனங்கள் யாவும் கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன. முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் தங்களது வருவாய் இழப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றன. தங்களது வாடிக்கையாளர்களை இழக்காமல் இருக்கவே இதுபோன்ற அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லும் தனது இழப்பிலிருந்து மீண்டுவரவும், வாடிக்கையாளர்களைக் காத்துக் கொள்ளவும் இதுபோன்ற ஆஃபர்களை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment