Thursday, 30 August 2018

நல்லாசிரியர் விருது கனவு கண்ட ஆசிரியர்கள் அதிருப்தி!

மதுரை, மதுரையில் நல்லாசிரியர் விருது விண்ணப்பம் கிடைக்காமல் தகுதி இருந்தும்
விண்ணப்பிக்க முடியவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சிறப்பாக பணியாற்றுவோருக்கு செப்.,5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு ஆக., முதல் வாரத்தில் இதற்காக விண்ணப்பிக்க இயக்குனர் உத்தர விட்டார். ஆனால் அவை எளிதாக கிடைக்கவில்லை. "பவர்" உள்ள சிலருக்கு மட்டும் கிடைத்துள்ளது. தகுதி இருந்தும் கடைசி நாளான ஆக.,10க்குள் விண்ணப்பிக்க முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

*ஆசிரியர்கள் கூறியதாவது:*


நல்லாசிரியர் விருது குறித்து கல்வி இயக்குனரின் சுற்றறிக்கை மாவட்ட, வட்டார கல்வி அலுவலக தகவல் பலகைகளில் ஒட்டப்படவில்லை. விண்ணப்பம் சிலருக்கு மட்டும் ரகசியமாக மெயிலில் அனுப்பப்பட்டது. கிராம ஆசிரியர்களுக்கு தகவல் சென்றடையவில்லை. ஆசிரியர் வாட்ஸ் ஆப் குரூப்பில் கூட தலைமையாசிரியர்கள் தகவல் தெரிவிக்கவில்லை.

'ஒரு கல்வி யூனியனில் ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை என்றால் அங்குள்ள பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களை விண்ணப்பிக்க வைக்க வேண்டும்'  என இயக்குனர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சில கல்வி யூனியன்களில் 'தகுதியான ஆசிரியரே இல்லை' என வட்டார கல்வி அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நேர்காணல் கூட, ஆசிரியர்களை ஞாயிறு அன்று அவசரமாக அழைத்து நடத்தப்பட்டது. இதற்காக சிலர் வெளியூரில் இருந்து ஓடி வந்து பங்கேற்றனர். புதுமை பள்ளி விருதுக்கும் வேண்டிய பள்ளிகளை சிலர் தேர்வு செய்ததால் மதுரைக்கு விருது கிடைக்கவில்லை. தேர்வு குழுக்கள் செயல்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment