Friday, 10 August 2018

முகநூல் பக்கத்தில் இணைய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!!

💎பள்ளிக்கல்வித் துறையின் முகநுால் பக்கத்தில் இணையும்படி, அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள்அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்*

*💎பள்ளிக்கல்வித் துறையில், பாடத்திட்டம் மாற்றத்தை தொடர்ந்து, நிர்வாக பணிகள், கற்பித்தல் பணிகள் போன்றவற்றையும், டிஜிட்டல் முறைக்கு மாற்ற, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன*


*💎முதற்கட்டமாக, அனைத்து மாணவர்களின் விபரங்களையும், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் இணைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது*


 *💎இந்த விபரங்களை பயன்படுத்தி, போலி மாணவர் பதிவுகளை நீக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது*


*💎அதேபோல், பாடத்திட்ட மாற்றத்தின்படி, 'வீடியோ' வழி பாடங்கள் நடத்தவும், 'ஸ்மார்ட்' வகுப்புகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது*


*💎இதன் ஒரு கட்டமாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிெபறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், பள்ளி கல்வியின், 'வொர்க் பிளேஸ்' என்ற, முகநுால் பக்கத்தில் இணைய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்*


*💎இதற்காக ஆசிரியர்கள், 'வொர்க் பிளேஸ்' என்ற, முகநுால் பக்கத்திற்கு சென்று, அதிலுள்ள, குரூப்பில் இணைவதற்கான விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.அதிகாரிகள் அவர்களின் விபரங்களை சரி பார்த்து, குரூப்பில் இணைய அனுமதி அளிப்பர்*


*💎அதன்பின், அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட குரூப்பில் இணைக்கப்படுவர்*


*💎அதில், ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறை, தனித்திறன் உள்ளிட்டவற்றை பதிவு செய்யலாம். அவற்றை மற்ற ஆசிரியர்களும் பார்த்து, தெரிந்து கொள்வர்*


*💎ஆசிரியர்களின் புதிய கற்பித்தல் முறைகள், வழிமுறைகள் நன்றாக இருந்தால், அவற்றை மற்ற பள்ளிகளிலும் செயல்படுத்த, அதிகாரிகள் அறிவுறுத்துவர்.எனவே, ஒரு ஆசிரியரின் திறமை, மற்ற பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்*


No comments:

Post a Comment