Tuesday, 28 August 2018

ரேசன் கடையில் மாணவர்களுக்கு பாடம்!


அரசுப் பள்ளிக்கூடக் கட்டடம் பழுதடைந்த காரணத்தால் மாணவர்களுக்கு ரேசன் கடை இருக்கும் கட்டடத்தில் பாடம் நடத்தப்படுகிறது. ரேசன் கடை செயல்படும் சமயங்களில் மாணவர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்று பாடம் எடுத்துவருகிறார்கள் ஆசிரியர்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே கருமாண்டகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டுவருகின்றது. இந்தப்பள்ளியில் அம்மாபட்டி காலனி சேர்ந்த 75 சதவிகிதக்கும் மேலான மலைவாழ் மக்களின் குழந்தைகள் மற்றும் கருமாண்டகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த 22 மாணவர்கள் படிக்கின்றனர்.

கடந்த 1988ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளியில், ஒரு தலைமையாசிரியர், ஒரு உதவியாசிரியர் பணிபுரிகின்றனர்.

தற்போது, இந்தப் பள்ளியின் கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. கடந்த சில நாள்களாக பெய்துவரும் பெருமழையால் இக்கட்டடத்தின் ஒரு பகுதி லேசாக கீழே இறங்கிவிட்டது.

எப்போது வேண்டுமானாலும் பள்ளியின் இக்கட்டடம் சரிந்து விழலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்குப்படிக்கும் மாணவர்களை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தற்காலிகமாக இப்பகுதியில் இருக்கும் ரேசன் கடைக்கு மாற்றி, பாடம்நடத்தி வருகின்றனர் ஆசிரியர்கள்.



பள்ளிக்கூட கட்டடத்திற்கு பூட்டுபோடப்பட்டுவிட்டது. கரும்பலகை உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இல்லாமல் ரேசன் கடையில்மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ரேசன் கடை செயல்படும் சமயங்களில் மாணவர்களை அருகிலுள்ள கோயிலுக்குஅழைத்துச் சென்றுவிடுகின்றனர் ஆசிரியர்கள்.

தற்போது தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால் மாணவர்கள் அடிக்கடி இடமாற்றப்பட்டுஅலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால் குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, இப்பள்ளிக்கு நிரந்தரமாக புதியகட்டடம் கட்டித்தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மலைவாழ் மக்களின் குழந்தைகள் அதிகம் படிக்கும் இப்பள்ளியின் கோரிக்கை தமிழக அரசுக்கு எட்டுமா? என்று ஆவலுடன்காத்திருக்கிறார்கள் இக்கிராமவாசிகள் மற்றும் ஆசிரியர்கள்.

No comments:

Post a Comment