Friday, 31 August 2018

இன்றும், நாளையும் தமிழகத்தில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை

*தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும்,
நாளையும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.*

*தமிழகத்தில் வலுப்பெற்று வந்த தென் மேற்கு பருவ மழை, வட மாநிலங்களுக்கு நகர்ந்துள்ளது. அதே சமயம் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வருகிறது.*

*இந்த வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும்.*

*நேற்று டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.*

 *சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை.சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், நந்தனம் பகுதிகளில் மழை. தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளிலும் மழை.*

*இந்த நிலையில் இன்றிலிருந்து மழை தீவிரமாக பெய்யும். இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.*

No comments:

Post a Comment